திருவனந்தபுரம்: திருநங்கையரை இந்தியாவிலேயே முதன்முறையாக, ஒரு தனி பாலினமாக அங்கீகரித்துள்ளது கேரள அரசு.
இதனையடுத்து, அனைத்துத்துறை அரசு விண்ணப்பங்களிலும், ஆண், பெண் ஆகியவற்றுக்கு அடுத்து, திருநங்கையர் என்ற பிரிவும் சேர்க்கப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
அரசுகளின் தரப்பில் திருநங்கையருக்கு சமஉரிமை வழங்கப்பட வேண்டும் என்று கடந்த 2014ம் ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. ஆனால், அந்த தீர்ப்பு நடைமுறைக்கு வருவதில் அதிக தாமதம் ஏற்பட்டது.
இந்நிலையில், உச்சநீதிமன்ற தீர்ப்பை முதன்முறையாக நடைமுறைக்கு கொண்டுவரும் மாநிலமாக மாறியுள்ளது கேரளா.