திருவனந்தபுரம்: கேரள உயர்நீதிமன்றம் ‘எம்பூரான்’ திரைப்படத்தை தடை செய்ய மறுத்துவிட்டது;  இந்த படத்தின்மூலம்,   எதாவது ஒரு வன்முறை சம்பவம் நடந்ததா? என கேள்வி எழுப்பியதுடன்,   படம் வன்முறையைத் தூண்டுகிறது என்று FIR காட்டுமாறு மனுதாரரைக் கேட்டுக்கொண்டது.  அதற்கு அரசு வன்முறை ஏதும் நடைபெறவில்லை என்று கூறியதால்,  படத்துக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது.

மலையாள நடிகர்கள் பிரித்விராஜ்  – மோகன்லால் நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான படம் ‘லூசிஃபர்’.  இப்படத்திற்கு கிடைத்த நல்ல வரவேற்பால் `எல்2; எம்புரான்’ என்ற தலைப்பில் படத்தின் இரண்டாம் பாகம் உருவானது. இதில் பிரித்விராஜ் மற்றும் மோகன்லாலுடன் மஞ்சு வாரியர், பிரித்விராஜ், டோவினோ தாமஸ், ஷிவதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

கடந்த 27ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியான இப்படம் 200 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. படத்தில் 2002 ஆம் ஆண்டு ஏற்பட்ட குஜராத் கலவரம் தொடர்பான காட்சிகள்.முல்லை பெரியாறு அணை தொடர்பான காட்சிகள் இடம் பெற்றுள்ளது.  முல்லை பெரியாறு காட்சிகளை நீக்க தமிழ்நாடு அரசு எந்தவொரு முன்னெடுப்பும் எடுக்காத நிலையில், விவசாயிகள் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து உள்ளனர்.

அதே வேளையில் குஜராத் கலவரம் தொடர்பான காட்சிகளுக்கு அம்மாநில அரசு மற்றும் வலது சாரி அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, பட தயாரிப்பாளருக்கு கடும் எச்சரிக்கை விடுத்தது. இதையடுத்து, படத்தயாரிப்பாளர் அந்த காட்சிகளை நீக்கி மறு திரையீடு செய்துள்ளார்.  மேலும் நடிகர் மோகன்லாலும் மன்னிப்பு கோரி உள்ளார். குஜராத் தொடர்பான சர்ச்சைக்குரிய காட்சிகள்  நீக்கப்பட்ட படத்தின் பதிப்பு  ஏப்ரல் 1ந்தேதி  மீண்டும் வெளியாகி உள்ளது.

இந்த சூழலில் ‘எல் 2 எம்புரான்’ படம்  வகுப்புவாத வன்முறையைத் தூண்டும் வகையில் இருப்பதாக குற்றம் சாட்டி படத்தை வெளியிட தடை விதிக்கக்கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் பாஜக நிர்வாகி ஒருவர்  வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த நிலையில் அவர் தொடர்ந்து வழக்கு மீதான விசாரணை (ஏப்ரல் 1ந்தேதி நடைபெற்றது.

அப்போது நீதிபதி “ஒரு வாரமாக ஓடும் இந்தப் படத்தால் தூண்டப்பட்ட எதாவது ஒரு வன்முறை சம்பவம் நடந்தது என்று சுட்டிக்காட்ட முடியுமா? என கேள்வி எழுப்பினார்.  தொடர்ந்து அரசு தரப்பு வழக்கறிஞர் அப்படி ஏதும் வழக்குகள் பதிவாகவில்லை என தெரிவித்துள்ளார்.

,இதற்கு பதில்கூறிய பாஜக வழக்கறிஞர்,  படத்தின் சில பகுதிகள் 2002 கோத்ரா வகுப்புவாத கலவரத்தை தேவையில்லாமல் குறிப்பிடுவதாக மனுதாரர் குற்றம் சாட்டினார். பின்பு பாஜக நிர்வாகியிடம், இது விளம்பரத்திற்காக போடப்பட்டுள்ள மனு என கண்டித்ததுடன், கோடை விடுமுறைக்குப் பின் வழக்கு விசாரிக்கப்படும்  என்று உத்தரவிட்டார்.

முன்னதாக வலதுசாரி அமைப்புகளின் மிரட்டலைத்தொடர்ந்து, எம்புரான் படத்தில், குஜராத் கலவரம் தொடர்பான 24 காட்சிகளை பட தயாரிப்பு நிர்வாகம் நீக்கி உள்ளது. ஆனால், முல்லைபெரியாறு குறித்த சர்ச்சை காட்சிகளை நீக்கவில்லை.

மோகன்லால் நடித்த L2: எம்பூரான் படத்தின் தயாரிப்பாளர்கள், 2002 குஜராத் கலவரங்களை சித்தரித்ததற்காக சர்ச்சைக்குரியதாக மாறியதால், படத்தில் 24 வெட்டுக்களை செய்துள்ளனர். படத்திற்கு எதிராக இந்துத்துவா ஆதரவாளர்கள் நடத்திய  பிரச்சாரத்தைத் தொடர்ந்து, இந்த நீக்கங்களை மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் (CBFC) அங்கீகரித்துள்ளது.

படத்திலிருந்து மொத்தம் 2 நிமிடங்கள் 8 வினாடிகள் குறைக்கப்பட்டுள்ளன, பெண்களுக்கு எதிரான வன்முறையை சித்தரிக்கும் 29 வினாடி காட்சி மிக நீளமானது. டிராக்டர்கள் மற்றும் பிற வாகனங்கள் மத கட்டமைப்புகளின் முன்பக்கம் செல்வதைக் காட்டும் காட்சிகளை நீக்குவதும் மற்ற முக்கிய மாற்றங்களில் அடங்கும். மார்ச் 27 அன்று வெளியான இந்த படத்தில், எதிர்ப்புகளைத் தொடர்ந்து 17 மாற்றங்களை CBFC செய்திருந்தது.

படத்தில் காட்டப்பட்டுள்ள கலவரங்கள் 2002 இல் கோத்ராவில் நடந்த சிறுபான்மையினருக்கு எதிரான கொடூரமான வன்முறையைக் குறிப்பிடுகின்றன. கலவரத்தில் ஈடுபட்ட முக்கிய நபர்களில் ஒருவரான பால்ராஜ் படேல் என்று எம்பூரான் தயாரிப்பாளர்கள் பெயரிட்டனர், இது வகுப்புவாத வன்முறையில் தனது பங்கிற்காக ஆயுள் தண்டனை பெற்ற பாபுபாய் படேல் அல்லது பாபு பஜ்ரங்கியைக் குறிப்பதாக பரவலாகக் கருதப்படுகிறது. புதிய பதிப்பில் பால்ராஜ் படேல் என்ற பெயர் பல்தேவ் என மாற்றப்பட்டுள்ளது.

இரண்டு நன்றி அட்டைகள், ஒன்றில் மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி பெயரையும், மற்றொன்றில் ஐஆர்எஸ் அதிகாரி ஜோதிஸ் மோகனையும் குறிப்பிடப்பட்டுள்ளது. மசூத் மற்றும் சயீத் மசூத் (பிரித்விராஜ் நடித்தார்) இடையேயான உரையாடல்கள் மற்ற நீக்கங்களில் அடங்கும்.

பெண்களுக்கு எதிரான வன்முறை சித்தரிப்புகளை குறிப்பாக நீக்கிய சுமார் ஐந்து திருத்தங்கள். சங்க பரிவார் அரசியல் பற்றிய குறிப்புகள், அத்துடன் தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) பற்றிய குறிப்புகளும் படத்திலிருந்து நீக்கப்பட்டன.

படத்திற்கும் அதன் நட்சத்திரங்களுக்கும் எதிராக எதிர்வினையாற்றியவர்கள் பெரும்பாலும் வலதுசாரி ஆதரவாளர்கள் – குறிப்பாக பாரதிய ஜனதா கட்சி (BJP) மற்றும் ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கம் (RSS) ஆகியோரை ஆதரிப்பவர்கள். இந்துக்கள் மற்றும் சங்க பரிவாரங்களை படம் ‘இழிவாகப் பேசியதில்’ அவர்கள் கோபமடைந்தனர்.

ஆர்எஸ்எஸ்ஸின் ஊதுகுழலான ஆர்கனைசரில், 2002 கலவரத்தின் போது இந்துக்கள் முதன்மையான ஆக்கிரமிப்பாளர்களாக பிம்பத்தை வலுப்படுத்துவதற்காக இந்த படம் வேண்டுமென்றே வடிவமைக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.