திருவனந்தபுரம்

ரும் 23ஆம் தேதி கேரளா சட்டசபையில் மதுக்கடைகள் திறப்பதற்காக நெடுஞ்சாலைகளின் பெயரை மாற்றும் மசோதாவை அரசு தாக்கல் செய்ய உள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன

கேரளாவை ஆளும் இடதுசாரி கூட்டணி, ஆட்சிக்கு வந்த 2016ஆம் ஆண்டிலிருந்தே,  முந்தைய ஆட்சியில் மூடப்பட்ட மதுக்கடைகளை மீண்டும் திறக்கவும், மூன்று நட்சத்திர ஓட்டல்களில் பார்கள் திறக்கவும் முயன்று வருகிறது.   அதற்கு முட்டுக்கட்டை போடும் வகையில் உச்சநீதிமன்றம் நெடுஞ்சாலைகளிலும்,  சுற்றி 500 மீட்டர் தூரத்திலும் உள்ள மதுக்கடைகளை மூட வேண்டும் என உத்தரவிட்டது.

இந்த உத்தர்வை முறியடித்து மதுக்கடைகளை மீண்டும் திறக்க கேரள அரசால் ஆலோசனை நடத்தப்பட்டது.    அதன்படி, நெடுஞ்சாலைகளின் பெயர்களை மாற்றி சாதாரண சாலைகளாக மாற்றப்படும் என ஊகங்கள் கிளம்பின.    தற்போது அந்த ஊகங்கள் உண்மையாகும் நேரம் வந்துள்ளது.   அரசு 4,032 கிமீ தூரமுள்ள நெடுஞ்சாலைகளை பெயர் மாற்ற உத்தேசித்துள்ளது.

இதற்கான ஒப்புதலை கேரளா முதல்வர் பினராயி விஜயன் அளித்துள்ளதாகவும்,  இந்த சட்ட மசோதா வரும் 23ஆம் தேதி சட்டசபையில் தாக்கல் செய்யப்படும் எனவும் செய்திகள் வெளியாகி உள்ளது.   கலால் துறை இதை வரவேற்றுள்ளது.   பொதுப்பணித்துறை சட்டசபையின் ஒப்புதலுக்குப் பின்னரே இந்த பெயர் மாற்றம் அமுல்படுத்தவேண்டும் என கருத்து தெரிவித்துள்ளது.

கலால்துறையின் கூற்றுப்படி,  ஏப்ரல் 1 முதல், 479 மதுக்கடைகளும், பார்களும் உச்சநீதிமன்ற உத்தரவுக்கிணங்க மூடப்பட்டுள்ளது எனவும் இதனால் தினமும் ரூ.3 கோடி வீதம் அரசுக்கு ஒரு வருடத்துக்கு ரூ. 1000 கோடி வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது எனவும் தெரிய வருகிறது.   இந்த வருமான இழப்பை ஈடுகட்ட இதைத் தவிர வேறு வழியில்லை என அரசு தெரிவித்துள்ளது.