லப்புழா

கேரள அரசு ஒரே ஒரு மாணவி தேர்வு எழுதுவதற்காக 70 பேர் கொண்ட படகை இயக்கி உளது.

நாடெங்கும் பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த நாடெங்கும் போக்குவரத்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.  அவ்வகையில் கேரள அரசு அம்மாநிலத்தில் படகுச் சேவையை நிறுத்தியது.   கேரளாவில் பல இடங்களில் முக்கிய போக்குவரத்து சேவையாகப் படகுச் சேவை உள்ளது.  இதில் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள குட்டநாடு என்னும் சிற்றூரும் ஒன்றாகும்.

கொரோனா பாதிப்பு அச்சத்தால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஹையர் செகண்டரி தேர்வுகள் கடந்த வார இறுதியில் நடந்தது.  இதில் குட்டநாடு பகுதியைச் சேர்ந்த சாண்டிரா பாபு என்னும் மாணவி மட்டும் தேர்வு எழுத கோட்டயம் செல்ல வேண்டி இருந்தது.    தற்போது படகுச் சேவை இல்லாததால் அவரால் தேர்வுக்குச் செல்ல முடியாதோ என்னும் அச்சம் எழுந்தது.

அதையொட்டி மாநில நீர் போக்குவரத்து துரை அதிகாரிகளை தமக்கு உதவுமாறு சாண்டிரா  கேட்டுக் கொண்டார்.  அவருடைய கோரிக்கையை ஏற்ற அதிகாரிகள் 70 பேர் செல்லக்கூடிய படகு ஒன்றை சாண்டிரா ஒருவருக்காக இயக்கி உள்ளனர்.   சாண்டிரா பாபு தக்கு கருணையுடன் உதவி செய்ததற்காக அதிகாரிகளுக்கு நன்றியை தெரிவித்துள்ளார்.

இது குறித்து மாநில நீர் போக்குவரத்து துரை அதிகாரி, “இந்த மாணவி ஒருவருக்காக வெள்ளி மற்றும் சனிக்கிழமை ஆகிய இரு தினங்களில் 70 பேர் செல்லக்கூடிய ப்டகு ஒன்றை இயக்கினோம் இதில் ஊழியர் உள்ளிட 5 பேர் இருந்தனர்.   இதற்குத் தனியாக வாடைக்கு எடுத்தால் ரூ.4000 கட்டணம் ஆகும்.  ஆனால் நாங்கள் சாண்டிராவிடம் ரூ.18 மட்டுமே வசூலித்தோம்” எனத் தெரிவித்துள்ளார்.