திருவனந்தபுரம்

ளைஞர் காங்கிரஸ் தொண்டர் ஒருவர் கொல்லப்பட்டதற்கும் ஒருவர் கடுமையாக தாக்கப்பட்டதற்கும் நடந்த விசாரணை விவரங்களை கேரள ஆளுனர் முதல்வரிடம் கேட்டுள்ளார்.

கேரல மாநிலம் காசரகோடு பகுதியை சேர்ந்த இளைஞர் காங்கிரஸ் தொண்டர்களான கிரிபேஷ் (வயது 22) மற்றும் சரத்லால் (வயது 24) ஆகியோர் ஞாயிற்றுக் கிழமை அன்று ஒரு நிகழ்வில் கலந்துக் கொண்டு இரவு வீடு திரும்பிகொண்டு இருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் அங்கு வந்த மர்ம நபர்கள் இருவரையும் தாக்கி உள்ளனர். இந்த தாக்குதலில் கிரிபேஷ் மரணம் அடைந்தார். சரத்லால் மருத்துவமனையில் அபாய நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து கேரள காவல்துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்துள்ளது.  அம்மாவட்டத்தில் காவல் துறை அதிகாரி பணியிடம் கடந்த ஆறு மாதங்களாக காலியாக உள்ளது. இது குறித்து இந்த தாக்குதல் குறித்து விசாரணையை துரிதப்படுத்த வேண்டி காங்கிரஸ் தலைவ்ர் ரமேஷ் சென்னிதாலா ஆளுநரை சந்தித்து இந்த விவரங்களை தெரிவித்துள்ளார்.

அத்துடன் காவல்துறை அதிகாரி பணியிடம் காலியாக உள்ள்தையும் ரமேஷ் சென்னிதாலா ஆளுநரிடம் தெரிவித்தார்.  அதன் அடிப்படையில் ஆளுநர் இந்த தாக்குதல் குறித்து நடந்துள்ள விசாரணையின் விவரங்களை உடனடியாக அளிக்குமாறு முதல்வருக்கு உத்தரவிட்டுள்ளார். அத்துடன் காவல் அதிகாரி பணியிடம் இன்னும் நிரப்பாமல் உள்ளதற்கு  அரசிடம் ஆளுநர் விவரம் கேட்டுள்ளார். இந்த தகவலை ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து மாநில காங்கிரஸ் தலைவர் மல்லபள்ளி ராமசந்திரன், “மத்தியில் எதிர்க்கட்சிகளை ஒடுக்க மோடியும் அமித்ஷாவும் நடந்துக் கொள்வதைப் போல் கேரள மாநிலத்தில் பிணராயி விஜயனும் கம்யூனிஸ்ட் செயலர் கொடியேறி பாலகிருஷ்ணனும் நடந்துக் கொள்கின்றனர். அரசியல் கொலைகளில் போலிக் குற்றவாளிகளை கைது செய்வது கம்யூனிஸ்ட் வழக்கமாக உள்ளது. ஆனால் இந்த கொலையில் உண்மை குற்றவாளிகளை கைது செய்யவேண்டும்” என தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சி இந்த தாக்குதல் மற்றும் கொலைக்கு எதிராக போராட்டங்களும் இரங்கல் கூட்டங்களும் மாநிலம் எங்கும் நடத்தி வருகிறது. இந்நிலையில் அந்தப் பகுதி கம்யூனிஸ்ட் கட்சியின்  தலைவர்களில் ஒருவரான பீதாம்பரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த தாக்குதலை திட்டமிட்டு நடத்தியதாக கூறப்படும் பிதாம்பரனை கம்யூனிஸ்ட் கட்சி நேற்று இரவு கட்சியில் இருந்து நீக்கி உள்ளது.