திருவனந்தபுரம்:
 
 கேரளாவில் ஓணம் பண்டிகையையொட்டி அரசு அலுவலங்களில் அந்தப்பூ கோலம் போடுவதற்கும், அதேபோல் குத்துவிளக்கு ஏற்றவும் கம்யூனிஸ்டு அரசு தடை போட்டுள்ளது.
கேரளாவில் பினராய் விஜயன் தலைமையிலான கம்யூனிஸ்டு ஆட்சி ஏற்பட்ட பிறகு அரசு துறைகளில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது.
athappo
முதலமைச்சர் அலுவலகம் மற்றும் அரசு அலுவலகங்களில் அதிகாரிகள், பொதுமக்கள் இடையே இருந்த தடைகள் நீக்கப்பட்டு எந்த நேரத்திலும் பொது மக்கள் தங்கள் குறைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் நேரடியாக தெரிவிக்க செய்யும் வகையில்  மாற்றங்கள் செய்து உத்தரவிடப்பட்டு உள்ளது.
சமீபத்தில் ஓணம் பண்டிகை யின்போது அரசு அலுவலகங்களில் பணி நேரத்தில் அத்தப்பூ கோலம் போட தடை விதிக்கப்பட்டது. இதனால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
அதையடுத்து, கேரள அரசு அலுவலகங்களில் குத்துவிளக்கு ஏற்றவும், ஊது பத்தி கொளுத்தி வைக்கவும் தடைவிதிக்கப்பட்டு உள்ளது.

கேரள அமைச்சர் சுதாகரன்
கேரள அமைச்சர் சுதாகரன்

கேரள தேவசம் மந்திரி சுதாகரன் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார். அரசு அலுவலகங்களில் இதுபோன்ற மத சடங்குகள் தேவையில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
கேரள கம்யூனிஸ்டு அரசின் இதுபோன்ற அறிவிப்புக்கு கேரள இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
குத்துவிளக்கு ஏற்றுவது மத சடங்கு அல்ல, இது கேரள பாரம்பரியமான முறையாகும். அனைவருக்கும் நன்மை கிடைக்க வேண்டும் என்பதற்காக குத்துவிளக்கேற்றி பணியை தொடங்குவது நமது மரபு. எனவே இதில் சர்ச்சையை ஏற்படுத்தி மத உணர்வுகளை அரசு தூண்ட வேண்டாம் என அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.