திருவனந்தபுரம்:
அடுத்த 5 ஆண்டுகளில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை இரண்டு மடங்கு உயர்த்த கேரளா அரசு திட்டமிட்டுள்ளது.
இது குறித்து கேரளா சுற்றுலா துறை துணை இயக்குனர் ராஜ்குமார் கூறுகையில், ‘‘கேரளாவுக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை அடுத்த 5 ஆண்டுகளில் நூறு சதவீதம் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதேபோல் உள்ளூர் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையையும் இதே காலக்கட்டத்தில் 50 சதவீதம் அதிகரிக்கப்படும். புதிய அறிமுகமாக கொச்சி கோட்டை, புனித தளமாக கொச்சி முழிரீஸ் பயனலே உள்ளிட்ட புதிய சுற்றுலா தளங்கள் ஏற்படுத்தப்படுகிறது. கொச்சியை ஓவிய மையமாக உருவாக்கும் திட்டமும் செயல்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.