திருவனந்தபுரம்: கேரளாவை உலுக்கி வரும், தங்கக் கடத்தல் வழக்கில் சிறையில் உள்ள ஸ்வப்னா சுரேஷுக்கு எதிரான அமலாக்கத்துறை வழக்கில்,  ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலத்தில் உள்ள ஐக்கிய அரபு எமிரேட் தூதரகத்தின் பெயரில் தங்கம் கடத்தல் நடைபெற்று வந்த விவகாரம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  இந்த கடத்தல் விவகாரத்தில் மாநில அரசுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.  விமானத்தின் மூலம் பெங்களூருக்கு வந்த 30 கிலோ தங்க கட்டிகளை சுங்கத்துறையினர் கைப்பற்றி விசாரித்ததில்,  முதல்வர் அலுவலகத்தில் ஐடி பிரிவில் பணியாற்றி வந்த ஸ்வப்னா சுரேஷ் கைது செய்யப்பட்டார். மேலும் முதல்வர் பினராயி விஜயனின் முதன்மைச் செயலர் எம்.சிவசங்கர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.  அத்துடன் மாநில அமைச்சர் உள்பட முதல்வர் பினராயி விஜயனுக்கும் தொடர்பு இருப்பதாக எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன.

இநத கடத்தல் தொடர்பாக கருப்பு பணத்தடுப்பு குடிறடாழடத  அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வந்தது. இதையடுத்து, சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை  கடந்த வாரம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதில் தங்கக் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷ் நியமனத்துக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் ஒப்புதல் அளித்தார் என  தெரிவித்திருந்தது. இதனால்  இந்த விவகாரம் மேலும் பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கிடையில், ஸ்வப்னா சுரேஷ் ஜாமின் கேட்டு எர்ணாகுளம்  நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுமீதான விசாரணையைத் தொடர்ந்து, அமலாக்கத்துறை வழக்கில்,  எர்ணாகுளம் முதன்மைஅமர்வு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.  வரும் வழக்கில் ஸ்வப்னாவுக்கு ஜாமீன் அளித்துள்ளது.

சுங்கத்துறை வழக்கு நிலுவையில் உள்ளதாலும், காஃபியோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு ஸ்வப்னா சுரேஷ் தற்போது சிறையில் இருந்து வெளிவர முடியாது என்பது  குறிப்பிடத்தக்கது.