கேரள தங்க கடத்தல் வழக்கை தேசிய புலானாய்வு முகமை விசாரித்து வரும் நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய பிரதான குற்றவாளி ஸ்வப்னா மீதான பணமோசடி வழக்கை அமலாக்கத்துறை விசாரிக்கிறது.
இதன் விசாரணையில் தினம் ஒரு திடுக்கிடும் தகவல் வெளியான வண்ணம் உள்ளது.
கொச்சியில் உள்ள . சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த அறிக்கையில்,, ஸ்வப்னாவுக்கும், முதல்வர் பினராயி விஜயனின் முன்னாள் முதன்மை செயலாளர் சிவசங்கருக்கும் நெருங்கிய தொடர்பு இருந்ததாக புதிய தகவலை நேற்று முன் வைத்தது.
இதனை குற்றவாளி ஸ்வப்னாவும், சிவசங்கரும் ஒப்புக்கொண்டதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
சிவசங்கரும், ஸ்வப்னாவும் மூன்று முறை வெளிநாடுகளுக்கு சென்று வந்துள்ளதாக. குறிப்பிட்ட அமலாக்கத்துறை, கடந்த 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் அவர்கள் இருவரும் எந்தெந்த தேதியில் எந்தெந்த நாடுகளுக்கு சென்று வந்தனர் என்ற முழுப்பட்டியலையும் சிறப்பு நீதி மன்றத்தில், தெரிவித்துள்ளது
-பா.பாரதி.