திருவனந்தபுரம்: கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள கேரள தங்கக் கடத்தல் வழக்கின் குற்றப்பத்திரிகையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. இது மாநிலத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த விவகாரம் கேரள மாநிலத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மாநில அரசு பதவி விலக வேண்டும் என காங்கிரஸ், பாஜக கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன.
இந்த நிலையில், வழக்கு தொடர்பாக அமலாக்கத் துறை நேற்று கொச்சியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதில் தங்கக் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷ் நியமனத்துக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் ஒப்புதல் அளித்தார் என குற்றம்சாட்டி உள்ளது.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷ் கேரள அரசின் ‘ஸ்பேஸ் பார்க்’ திட்டத்தில் கடந்த 2019 நவம்பரில் சேர்ந்துள்ளார். இவரது பணி நியமனம் பினராயிக்கு தெரியும் என்றும் இவர் ஏற்கனவே ஐக்கிய அரபு அமீரக தூதரக ஊழியராக பணியாற்றிவர் என்பதை முதல்வர் அறிவார் என்றும் ஸ்வப்னா சுரேஷ் அமலாக்கத்துறையிடம் தெரிவித்துள்ளார் . இதனால் இந்த வழக்கில் முதல்வர் உள்பட அனைவரும் விசாரிக்கப்பட வேண்டும் என குற்றப்பத்திரிகையில் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
குற்றப்பத்திரிகையில் முதல்வர் பினராயி விஜயன் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது, மாநிலத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.