கேரளாவில் தயாரிக்கப்படும் ஜவான் ‘டிரபிள் எக்ஸ்’ ரம் மதுபானத்தை எவ்வளவு குடித்தாலும், “கிக்’ ஏறவில்லை என, “குடிமகன்’கள் தொடர்ந்து புகார் கூறியதாலும், கோழிக்கோடு பகுதியில், இந்த மதுவை குடித்தவர்கள், ரம் உட்கொண்ட பின்னர் ஒரு சிலருக்கு மனக்குழப்பம் ஏற்பபட்டதாக புகார் கொடுத்தனர்.
புகாரின் அடிப்படையில் ரசாயன சோதனை செய்ய கலால் துறை முடிவு செய்தது. அறிக்கையைத் தொடர்ந்து, மாநில கலால் ஆணையர் மாநிலத்தின் அனைத்து பிரிவுகளின் துணை கலால் ஆணையர்களுக்கு இந்த உத்தரவை பிறப்பித்தார்., அந்த மதுபானத்தின் விற்பனையை நிறுத்தி வைக்க மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது.
சம்பந்தப்பட்ட துறையின் அதிகாரிகள் சமீபத்தில், மதுபானக் கடைகளுக்குச் சென்று, குறிப்பிட்ட மதுபான ரகத்தினை எடுத்து, பரிசோதனைக்கு அனுப்பினர். அப்காரி – கேரள ஸ்டேட் பெவரேஜஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் ( Abkari – Kerala State Beverages Corporation Ltd, ) இது தொடர்பாக வேதியியல் பகுப்பாய்வு மேற்கொண்டது.
இதில், குறிப்பிட்ட தொகுதிகளிலிருந்து வரும் ரம் மாதிரிகளில், “போதை’ ஏறுவதற்காக சேர்க்கப்பட வேண்டிய எரிசாராயத்தின் அளவு மிகக் குறைவாகச் சேர்க்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஜவான் ‘டிரபிள் எக்ஸ்’ ரம் விற்பனையை முடக்குமாறு அனைத்து துணை கலால் ஆணையர்களுக்கும் கலால் ஆணையம் உத்தரவு பிறப்பித்தது.
முன்னதாக கேரள மாநில பிவரேஜஸ் கார்ப்பரேஷனால் ஜூலை 20 தேதியிட்ட பேட்ச்ஸ் 245, 246 மற்றும் 247 ஆகியவற்றின் மாதிரிகளில், மதுபான பாட்டில்களின் அடியில் ரசாயனம் படிந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து பகுப்பாய்வு செய்யப்பட்டது.
அதில், போதை தரும் ஆல்ஹகாலின அளவுன 39.09 சதவிகிதம், 38.31 சதவிகிதம் மற்றும் 39.14 சதவிகிதம் அளவைக் கொண்டிருந்தது. இது போதை தருவதற்கு போதுமானதல்ல என்பதால், அதன் விற்பனையை முடக்குமாறு என தென் மண்டல கூட்டு கலால் ஆணையம், மாநில அரசுக்கு அறிக்கை அளித்தது.
இதைத்தொடர்ந்து, ஜவான் ‘டிரபிள் எக்ஸ்’ ரம் விற்பனையை நிறுத்தி வைக்குமாறு, நவம்பர் 15, 2020 அன்று கேரள அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
கேரளாவில் பிரபலமாக விளக்கும் ஜவான் XXX ரம் மாநிலத்தில் 1 லிட்டர் 560 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கேரள அரசு நடத்தும் திருவிதாங்கூர் சர்க்கரை மற்றும் கெமிக்கல்ஸ் லிமிடெட் தினமும் 6000 ரம் பாட்டில்களை உற்பத்தி செய்கின்றன. மாநிலத்தில் மதுபான விற்பனையில் ஏகபோக உரிமையைக் கொண்ட கேரள மாநில பிவரேஜஸ் கார்ப்பரேஷன் இந்த எண்ணிக்கையை 8,000 ஆக உயர்த்த வேண்டும் என்று கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது.