சம்பளத்தைக் குறைக்க நடிகர்களுக்கு ‘கெடு’..

Must read

சம்பளத்தைக் குறைக்க நடிகர்களுக்கு ‘கெடு’..

கேரள திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க கூட்டம் கொச்சியில் நடந்தது.

கொரோனாவால் திரைப்பட தொழில் பெரும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள நிலையில், மலையாள நடிகர்கள், தங்கள் ஊதியத்தைப் பாதியாகக் குறைத்துக்கொள்ள வேண்டும் என்று இந்த கூட்டத்தில் அனைத்து தயாரிப்பாளர்களும் வலியுறுத்தியுள்ளனர்.

இதனைப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய, தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் எம்.ரெஞ்சித்,’’ நடிகர்களும், டெக்னீஷியன்களும் சம்பளத்தை பாதியாக குறைக்க வேண்டும், இல்லை என்றால், இனிமேல் சினிமா தயாரிப்பில் ஈடுபட மாட்டோம்’’ என்று அதிரடியாகத் தெரிவித்தார்.

‘’ கடந்த ஆண்டு (2019) வெளியான மலையாள திரைப்படங்களில் ஆறு படங்கள் மட்டுமே லாபம் சம்பாதித்துக் கொடுத்துள்ளது.’’ என்று அவர் குறிப்பிட்டார்.

‘’சம்பள குறைப்பு விவகாரம் தொடர்பாக மலையாள நடிகர்கள் சங்கமான ‘அம்மா’வுடனும், சினிமா தொழிலாளர்கள் சங்கத்துடனும் பேச்சு நடத்துவோம்’’ என்று ரெஞ்சித் மேலும் கூறினார்.

நடிகர்கள் சம்பளத்தைக் குறைக்கா விட்டால், சினிமா தயாரிப்பை நிறுத்துவோம் என தயாரிப்பாளர்கள் எடுத்துள்ள முடிவு, மலையாள சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More articles

Latest article