திருவனந்தபுரம்

கேரளாவின் முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கேரளா மாநில முன்னாள் முதல்வரான உம்மன் சாண்டி அம்மாநில காங்கிரஸ் கட்சியின் முத்த தலைவர்களில் ஒருவர் ஆவார்.  தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.   அவர் நிமோனியா காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உம்மன் சாண்டியின் மகன் தனது முகநூல் பதிவில் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.  தனது பதிவில் அவர் தமது தந்தை உம்மன் சாண்டி உடல்நலம் பெற அனைவரும் பிரார்த்தனை செய்யுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.