சென்னை,

வானி ஆற்றில் கேரளா  அணை கட்டுவதை உடடினயாக தடுத்து நிறுத்த கோரி பிரதமருக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதி உள்ளார்.

அணை கட்டுவதை உடனே நிறுத்த மத்திய நீர்வளத்துறைக்கு உத்தரவிட வேண்டும் என அதில் கோரி உள்ளார்.

இதுகுறித்து, தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில்,

பவானி ஆற்றில் கேரளா அணை கட்டுவதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்திற்கு உத்தரவிட வேண்டும் என்றும்,  தடுப்பணை கட்ட, தமிழக அரசின் அனுமதியை கேரள அரசு பெறவில்லை. பவானியில் கேரளா அணை கட்டுவதால், தமிழகத்திற்கு நீர்வரத்து குறையும் அபாயம் உள்ளது என்று கூறியுள்ளார்.

மேலும்,  கேரள அரசின் நடவடிக்கை காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்புக்கு எதிரானது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பவானி ஆறு – ஒரு பார்வை…..

கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங் களின் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு நீராதாரமாக விளங்கி வருவது பவானி அறு. இந்த  ஆற்றில் கேரளா தடுப்பணை கட்டும் பணியைதொடங்கி யுள்ளதால், தமிழகத்தின் 3 மாவட்டங்க ளில் பாதிப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் அப்பர் பவானியில் உருவாகும் பவானி ஆறு, கேரளாவின் முக்காலி, அட்டப்பாடி வழியாக மீண்டும் தமிழகத்தில் நுழைந்து கோவை மாவட்டம் பில்லூர் அணைக்கு வந்து சேர்கிறது. பில்லூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு செல்கிறது. இந்த ஆறு கேரள பகுதியில் இருந்து வரும்போது, அதன் ஒரு கிளை பிரிந்து சிறுவாணி அணைக்கும் செல்கிறது.

இந்த அணைகள் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் மற்றும் விவசாயத்துக்கான முக்கிய நீராதாரமாக உள்ளன.

கடந்த 14 ஆண்டுக்கு முன்பு கேரள பகுதியிலுள்ள பவானி ஆற்றில் முக்காலி எனுமிடத்தில் தடுப்பணை கட்டும் பணியை கேரள அரசு மேற்கொண்டது. அப்போது தமிழகத்தில் எழுந்த எதிர்ப்பால், அது தடுத்து நிறுத்தப்பட்டது.

பின்னர் கடந்த ஆண்டு சிறுவாணி அணையின் குறுக்கே தடுப்பணை கட்டும் முயற்சி மேற்கொள் ளப்பட்டது. தமிழகத்திலுள்ள பல்வேறு கட்சியினர்  நடத்திய போராட்டம் காரணமாக தடுத்து நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், கடந்த 4 நாட்களுக்கு முன்பு பில்லூர் அணைக்கு முன்பாக 30 கிமீ தூரத்தில் கேரளாவின் தேக்கோட்டை எனும் கிராமத்தின் வழியாக செல்லும் பவானி ஆற்றில் தடுப்பணை கட்டும் பணியை கேரள அரசு துவங்கியுள்ளது.

அங்கு 20 அடி உயரத்திற்கு தடுப்பணை கட்ட திட்டமிட்டு, அதற்கான மணல், கல் மற்றும் ஜல்லி கற்கள், சிமென்ட் கலவை ஆகியவற்றுடன் பணியை துவங்கியுள்ளது. இதற்காக பொக்லைன் இயந்திரங்கள் மூலம் குழி தோண்டும் பணி நடந்து வருகிறது.

இப்பணியை ஒரு மாதத்தில் முடிக்க திட்டமிட்டுள்ளது. இதனால் 3 மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பவானி ஆற்றில் தடுப்பணை கட்டும் பணியை தமிழக அரசு மற்றும் மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும், என்று பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.