பத்தனம்திட்டா:
சத்தன்கரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் பிபி சந்தீப் குமார் வெட்டி கொல்லப்பட்டார்.

பெரிங்கரா எல்சி கமிட்டி செயலாளர் பிபி சந்தீப் குமார். இவருக்கு வயது 34. இவரை மர்ம நபர்கள் சிலர், மார்பில் ஒன்பது கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர். இந்த சம்பவத்தைச் செய்தவர்கள் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் என்று சிபிஎம் குற்றம் சாட்டியுள்ளது.
இச்சம்பவம் இரவு 8 மணியளவில் நடந்துள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. சந்தீப்பின் அலறல் சத்தம் கேட்டு சம்பவ இடத்திற்கு விரைந்த அப்பகுதி மக்களைப் பார்த்ததும், அவரை குத்தி கொலை செய்த 5 பேர் அங்கிருந்து தப்பி ஓடியதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து காவல்துறையினர் தெரிவிக்கையில், கணியம்பரம்பில் ஜிஷ்ணு (கண்ணன்) மற்றும் ஸ்ரீஜித் ஆகிய இருவருக்கு இந்த கொலையில்தொடர்பு இருப்பதாகத் தெரிய வந்துள்ளது. அவர்கள் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
குடிபோதையிலிருந்த மர்மநபர்கள் சந்தீப்பைப் பின்தொடர்ந்து சென்று, பைக்கில் வந்து சந்தீப்பை11 முறை கத்தியால் குத்தியுள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த பொதுமக்கள் சந்தீப்பை உடனடியாக திருவல்லா தாலுகா மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் ஏ.விஜயராகவன் தெரிவிக்கையில், கடும் எதிர்ப்புகள் எழ வேண்டும் என்றும், ஆர்எஸ்எஸ் அரசியல் கொலைகளுக்கு எதிராக. மக்கள் அணிதிரள வேண்டும் என்றும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், நமது சமூகத்தில் உள்ள நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் நோக்கத்தில் இந்த சம்பவம் நடத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
Patrikai.com official YouTube Channel