கேரளாவில் முதன்முறையாக 1,038 பேருக்கு இன்று கொரோனா…!

Must read

திருவனந்தபுரம்: கேரளாவில் முதன்முறையாக 1,038 பேருக்கு இன்று கொரோனா உறுதியாகி உள்ளது.
கேரளாவில் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந் நிலையில் முதன்முறையாக இன்று அதிரடியாக 1,038 பேருக்கு தொற்று உறுதியாகி இருக்கிறது.
இது ஒருநாளில் இதுவரை இல்லாத உச்சபட்ச எண்ணிக்கையாகும். அற்றில் திருவனந்தபுரத்தில் 276 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 15 ஆயிரத்திற்கும் மேல் பதிவாகி உள்ளது.
இதுவரை 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்து இருக்கின்றனர்.  44 பேர் பலியாகி உள்ளனர்.  கேரளாவில் கொரோனா பாதிப்புக்கு 8,818 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இந்த தகவலை முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்து உள்ளார்.

More articles

Latest article