திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று மேலும் 3593 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து கேரள சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது: 3593 பேருடன் சேர்த்து, இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4,89,703 ஆக உயர்ந்துள்ளது.
சிகிச்சை பெற்று வந்தவர்களில் மேலும் 22 பேர் பலியாகி உள்ளனர். இதையடுத்து, ஒட்டு மொத்தமாக பலியானோர் எண்ணிக்கை 1,714 ஆக உள்ளது.
இன்று மட்டும் 5,983 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணம் பெற்றவர்களின் மொத்த எண்ணிக்கை 4,08,460 ஆக அதிகரித்து உள்ளது. தற்போது வரை 79,410 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
[youtube-feed feed=1]