திருவனந்தபுரம்: 50 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை வழங்க கோரி மத்திய அரசுக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. அதிகரித்து வரும் தொற்றுகள் காரணமாக தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமடைந்து வருகின்றன.
பல்வேறு மாநிலங்களும் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு நிலவி வருவதாக மத்திய அரசிடம் கூறி வருகின்றன. இந் நிலையில் கேரளாவுக்கு கூடுதலாக 50 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் வழங்க வேண்டும் என்று கோரி அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் மத்திய சுகாதார துறைக்கு கடிதம் எழுதியுள்ளார்.
கடிதத்தில் அவர் கூறி உள்ளதாவது: கேரளாவில் தற்போது 3 நாள்களுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசிகள் இருப்பு உள்ளது. கேரளாவுக்கு இதுவரை வழங்கப்பட்ட 56, 84,360 தடுப்பூசிகளில் 48, 24,505 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு விட்டன. கூடுதலாக 50 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
[youtube-feed feed=1]