திருவனந்தபுரம்:

பரிமலை அய்யப்பன் கோவில் சன்னிதானத்திற்குள் 2  பெண்களை கேரள அரசு பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்ற விவகாரம் தொடர்பாக சபரிமலை சன்னிதானம் நடை அடைக்கப்பட்டது.

இந்த நிலையில், சபரிமலை தலைமை தந்திரிக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடுமை யாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.  உச்சநீதி மன்ற தீர்ப்பை கடைபிடிக்க முடியாவிட்டால் பதவியில் இருந்து வெளியேறும்படி கூறி உள்ளார்.

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற உச்சநீதி மன்ற தீர்ப்புக்கு அய்யப்ப பக்தர்கள், இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரி வித்து வருகின்றன. ஆனால், கேரள அரசு உச்சநீதி மன்ற தீர்ப்பை அமல்படுத்தியே தீருவோம் என்று அடம்பிடித்து வருகிறது. இதன் காரணமாக மாநிலத்தில் போராட்டங்களும் ஆர்ப்பாட்டங் களும் நடைபெற்று வருகின்றன. இது பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் பல்வேறு பெண்கள் அமைப்பினர் சபரிமலை செல்ல முயன்ற நிலையில், பக்தர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக திருப்பி அனுப்பட்டனர். இந்த பரபரப்பான சூழ் நிலையில் நேற்று அதிகாலை 2  பெண்களை கேரள காவல்துறையினர் மப்டி உடை அணிந்து கோவில் ஊழியர்கள் செல்லும் பின்வழியாக கோவிலுக்குள் அழைத்துச் சென்றனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து கோவில் நடை நடைக்கப்பட்டு, பரிகார பூஜைகள் நடைபெற்றன.

இந்த நிலையில், பெண்கள் சென்றதால் பரிகார பூஜை நடத்திய கோவில் தலைமை தந்திரிக்கு கேரள முதல்வர் பிரனாயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். உச்சநீதி மன்ற தீர்ப்பை கடைபிடிக்க முடியாவிட்டால் பதவியை விட்டு வெளியேறுங்கள் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையில் பெண்கiள கோவில் சன்னிதானத்திற்குள் காவல்துறையினர் அழைத்து வந்ததற்கு பந்தளம் ராஜ குடும்பத்தைச் சேர்ந்த பிஜிஎஸ் வர்மா கடுமையாக சாடியுள்ளார்.

“வழிபாடுகளுக்கு இடையூறு செய்வதற்காக யாரையாவது அனுப்ப தினமும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இது பண்டிகை காலம். இந்த காலத்தில் தினமும் 2 லட்சம் பக்தர்கள் வரை கோவிலுக்கு வருவார்கள். ஆனால், அரசாங்கத்தின் நடவடிக்கையால் அது குறைந்துள்ளது. தினமும் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் பக்தர்கள் வரை வருகை தருகின்றனர்’’. கேரள அரசு திட்டமிட்டு இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறது என்று குற்றம் சாட்டி உள்ளார்.

இதற்கிடையில் சபரிமலை அய்யப்பன் சன்னிதானத்திற்குள்  பெண்கள் நுழைந்ததால், கோவில் நடை அடைக்கப்பட்டு  பரிகார பூஜை நடத்தியது உச்சநீதி மன்ற தீர்ப்புக்கு எதிரான என கூறி உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.