திருவனந்தபுரம்: கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் தொற்றிலிருந்து மீண்டார்.
நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. தொற்று பரவலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந் நிலையில், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கடந்த ஏப்ரல் 8ம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கோழிக்கோடு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இன்று பினராயி விஜயனுக்கு பரிசோதனை செய்ததில் தொற்றிலிருந்து மீண்டது தெரிய வந்துள்ளது. இதையடுத்து, அவர் விரைவில் வீட்டிற்கு திரும்புவார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி மற்றும் சட்டப்பேரவைத் தலைவர் ஸ்ரீராமகிருஷ்ணனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.