கேரளாவில் வெறிநாய் தொல்லை அதிகமாக இருப்பதாக நீண்டகாலமாக புகார் இருக்கிறது. அங்கு சுமார் 2.5 லட்சம் வெறி நாய்கள் சுற்றித் திரிவதாகவும், 2015-16-ம் ஆண்டில் மட்டும், ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் வெறி நாய் கடிக்கு ஆளானதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. வெறி நாய் கடி மருந்து, விநியோகத்தில் நாட்டி லேயே முதல் இடத்தைப் பிடித்திருப்பது கேரளாதான்.
இந்த நிலையில் கடந்த வருடம் ஆகஸ்ட் மதம், மாநிலமாக கேரளா திகழ்கிறது.
திருவனந்தபுரத்தில் சிலுவம்மா என்ற 65 வயது பெண் புல்லுவிளை கடற்கரை பகுதிக்கு சென்ற போது, வெறிநாய்கள் கூடி, அவரை கொடூரமாக கடித்துவிட்டன. மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.
ஆகவே சாலையில் திரியும் நாய்களுக்கு இனப்பெருக்கத் தடை மற்றும் விஷ ஊசி செலுத்திக் கொல்லவது என கேரள மாநில அரசு முடிவு செய்தது.
இதற்கு மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சரும், விலங்கின ஆர்வலருமான மேனகா காந்தி எதிர்ப்பு தெரிவித்தார். மேலும், “நாய்களால் குதறப்பட்ட அந்த பெண்மணி இறந்தது வருந்தத்தக்கது. அதற்காக, அப் பகுதியில் நாய்களை எல்லாம் அடித் துக் கொல்ல வேண்டும் என்பது முட்டாள்தனம். அந்த பெண், கடற்கரைக்குச் செல்லும் போது, இறைச்சி ஏதேனும் கொண்டு சென்றிருப்பார். அதனாலேயே நாய்கள் கடித்திருக்கும். மற்றபடி, நாய்கள் எப்போதும் காரணமின்றி துரத்தாது, கடிக்காது’ என்றும் மேனகா காந்தி தெரிவித்தார்.
இதையடுத்து கேரள மக்கள், மேனகா காந்திக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.
தற்போது இன்னொரு நாய் கடி விவகாரம் கேரளாவை அதிரவைத்திருக்கிறது. பிரபல நடிகை பருல் யாதவ். இவர், கிருத்யம் படத்தில், பிருதிவிரஜூக்கு ஜோடியாக நடித்து மலையாள பட உலகில் அறிமுகமானார். பிறகு கன்னட படங்கில் நடித்து வந்தார். 2004ம் ஆண்டு தனுஷ நடித்த ட்ரீம்ஸ் படத்தில், அவருக்கு நாயகியாகவும் நடித்திருக்கிறார்.
மும்பை ஜோகேஸ்வரி பகுதியில் வசித்து வரும் அவர், வழக்கம்போல, கடந்க திங்கட்கிழமை மாலை, தன்ன் நாயை கூட்டிக்கொண்டு நடைபயிற்சிக்கு சென்றார். அப்போது கும்பலாக வந்த தெரு நாய்கள், பருலையும், அவரது நாயையும் கொடூரமாக கடித்து குதறிவிட்டன. மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதி என்றாலும் நாய்களின் வெறித்தாக்குதலில் சிக்கிய அவரைக் காப்பாற்ற எவரும் முன்வரவில்லை. கடைசியில் அவரது பக்கத்துவீட்டுக்காரர் வந்து காப்பாற்றினார்.
பருலுக்கு முகம், கால்கள், கழுத்து, தலை என்று பல இடங்களிலும் ரத்த காயம் அடைந்த பருல், மும்பையில் உள்ள கொகிலபேன். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு நாய்கடிக்கான தடுப்பு ஊசி போட்டப்பட்டது. அதோடு தீவிர சிகிச்சைபிரிவில் சிகிச்சையும் நடந்து வருகிறது. நேற்று தலையில் ஒரு சிறிய அறுவை சிகிச்சை நடந்தது.
இந்த சம்பவம் நடந்தது மகராஷ்டிர மாநிலத்தின் தலைநகரான மும்பையில் என்றாலும், கேரளாவில் பலத்த அதிர்வை ஏற்படுத்தி உள்ளது.
காரணம், ஏற்கெனவே கேரளாவில் நாய்களால் குதறப்பட்டு சிலுவம்மா என்ற பெண்மணி மரணமடைந்தது… நடிகை பருல் மலையாளப்படங்களில் நடித்து கேரள மக்களுக்கு அறிமுகமாயிருப்பது.
ஆகவே தற்போதைய சம்பவத்தை அடுத்து, தெருவில் சுற்றும் நாய்களுக்கு கருத்தடை செய்ய வேண்டும், வெறிநாய்களைக் கொல்ல வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் கேரளாவில் தலை தூக்கியுள்ளது.
அதோடு, தெருநாய்கள் மீதான நடவடிக்கைகளை எதிர்க்கும் மத்திய அமைச்சர் மேனகாவை மீண்டும் கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்திருக்கிறார்கள் கேரள மக்கள். சமூகவலைதளங்களிலும் மேனகாவை மேனகாவை கடுமையாக விமர்சித்துவருகிறார்கள்.