திருவனந்தபுரம்:

கேரளா கொல்லம் மாவட்டத்தில் உள்ள குன்டாரா பகுதியை சேர்ந்த ஜித்து என்ற 14 வயது சிறுவன் கடந்த 14-ம் தேதி திடீரென மாயமானான். அவனது தந்தை கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு தேடி வந்தனர். இந்நிலையில் எரிந்த நிலையில் பிணமாக கிடந்த சிறுவனின் உடலை போலீசார் கண்டெடுத்தனர்.

சிறுவனின் தாயார் ஜெயாமோள் அளித்த வாக்குமூலம் முன்னுக்குப்பின் முரணாக இருந்தது. இதனால் போலீசார் சுமார் 44 வயது மதிக்கத்தக்க அந்தப் பெண்ணின் கைகளில் தீக்காயம் இருந்தது.

தொடர் விசாரணையில், கணவர் குடும்பத்தாருக்கு சொத்து தொடர்பாக ஏற்பட்ட தகராறில் ஜெயாமோள் பெற்ற மகனை உயிரிடன் எரித்துக் கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, ஜெயாமோளை கைதுசெய்த போலீசார் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்

[youtube-feed feed=1]