கென்னடி குடும்பத்தை விடாது துரத்தும் கருப்பு..
விபத்து, படுகொலை, மர்மச்சாவு என அமெரிக்க முன்னாள் அதிபர் ஜான் எஃப். கென்னடியின் குடும்பத்தில் 10 க்கும் மேற்பட்டோர் அகால மரணம் அடைந்துள்ளனர்.
‘கென்னடி குடும்பத்திற்கு கிடைத்த சாபம்’’ என்றே இதனை உலகம் உச்சரிக்கிறது.
முதல் மரணம்-
கென்னடியின் அண்ணன், ஜோசப் பி.கென்னடியின் கோர மரணம்.
அமெரிக்க கடற்படையில் பணியாற்றி வந்த அவர், இரண்டாம் உலகப்போரின் போது பலியானார்.
இங்கிலீஷ் கால்வாயை 1944 ஆம் ஆண்டு கடந்த போது, ஜோசப் பயணித்த விமானம் வெடித்து சிதறி அவர் இறந்தார்.
அதிபராக இருந்த போது ஜான் கென்னடி டல்லாஸ் என்ற இடத்தில் , 1963 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 22 ஆம் தேதி சுட்டுக்கொல்லப்பட்டார்.
பிறந்து இரு நாட்களே ஆன நிலையில் அவர் மகன் பாட்ரிக் சுவாச கோளாறு காரணமாக .( கென்னடி உயிர் இழப்பதற்கு) சில மாதங்களுக்கு முன்பு தான் இறந்திருந்தான்.
அதன் பிறகு அவர் குடும்பத்தில் ஏகப்பட்ட சாவுகள்.
அதிபர் ஜான் கென்னடியின் தம்பி ராபர்ட் அண்ணனை போலவே சுட்டுக்கொல்லப்பட்டவர் ஆவார்.
’லேட்டஸ்டாக’ இரு தினங்களுக்கு முன் மேலும் இரண்டு மரணங்கள், நிகழ்ந்துள்ளன.
அவரது பேத்தி மீவா கென்னடி, தனது 8 வயது மகன் ஜிடெனுடன் வாஷிங்டன் அருகே உள்ள, கடலில் கடந்த வியாழக்கிழமை படகு பயணம் செய்து கொண்டிருந்தார்.
இருவரையும் காணவில்லை.
கடலோர காவல் படை விடிய விடிய தேடியும் மீட்பு பணியில் தோல்வி தான் ஏற்பட்டது.
தாயும், மகனும் கடலில் மூழ்கி உயிர் இழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
– ஏழுமலை வெங்கடேசன்