டெல்லி
டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் ஒவ்வொரு கட்ட தேர்தலிலும் இந்தியா கூட்டணி வெற்றியை நெருங்குவதாக தெரிவித்துள்ளார்.
நேற்று டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களிடம்,
“தற்போதைய நாடாளுமன்ற தேர்தலின் ஒவ்வொரு கட்டமும் முடிவடையும்போது, மோடி அரசு வெளியேறி வருகிறது என்பதும், ஜூன் 4-ந் தேதி இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வருகிறது என்பதும் தெளிவாகிறது.
சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டங்களில் மத்திய அமைச்சர் அமித்ஷாவும், உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தும் என்னை அவமதித்தனர்.
பிரதமரால் அமித்ஷா வாரிசாக அறிவிக்கப்பட்டார், இதுவரை அமித்ஷா நீங்கள் இன்னும் பிரதமராகவில்லை, ஆனால் அவர் ஆணவத்தை காட்டுகிறார். இந்தியாவில் கெஜ்ரிவாலுக்குஆதரவு இல்லை என்றும், பாகிஸ்தானில் ஆதரவாளர்கள் அதிகம் என்றும் அவர் கூறியுள்ளார்
அவர் என்னை அவமதிக்கட்டும். நாட்டு மக்களை சபிக்க வேண்டாம். யார் பொதுமக்களை திட்டினாலும் நான் பொறுத்துக்கொள்ள மாட்டேன்”
என்று கூறினார்.