டெல்லி

பாஜக வாக்காளர் பட்டியலில்  முறைகேடு செய்து வெற்றி பெற முயல்வதாக கெஜ்ரிவால் குற்றம் சாட்டி உள்ளார்.

ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியில் செய்தியாளர்களிடம்,

”டெல்லி சட்டசபை தேர்தலில் வலிமையான வேட்பாளர்களையோ, பிரச்சினைகளையோ முன்வைக்க முடியாமல், நியாயமற்ற வழிகளில் வெற்றிபெற பா.ஜ.க. முயற்சிக்கிறது. அக்கட்சிக்கு முதல்-மந்திரிக்கான ஆளோ, சரியான வேட்பாளர்களோ இல்லை. இருப்பினும், முறைகேடு மூலம் வெற்றிபெற திட்டமிட்டுள்ளது.

ஏற்கெனவே ஒரே தொகுதியில் 11 ஆயிரம் வாக்காளர்களை நீக்குவதற்கான விண்ணப்பங்கள் கொடுத்தது. தலைமை தேர்தல் கமிஷனர் தலையீட்டால், அம்முயற்சி தடுக்கப்பட்டது.  தற்போது, எனது டெல்லி தொகுதியில், 5 ஆயிரம் வாக்காளர்களை நீக்கவும், 7,500 வாக்காளர்களை சேர்க்கவும் விண்ணப்பங்கள் கொடுத்துள்ளது.

இதன்மூலம், அத்தொகுதியில் 12 சதவீத ஓட்டுகளை மாற்றியமைக்க முடியும். ‘ஆபரேஷன் தாமரை’ என் தொகுதிக்கு வந்துவிட்டது. இத்தகைய முறைகேடு, ஜனநாயகத்தை சிறுமைப்படுத்தும். இதை தடுக்க தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபடுமாறு தேர்தல் கமிஷனை கேட்டுக்கொள்கிறோம்.

எனக் கூறியுள்ளார்..