புதுடெல்லி: நாட்டின் தலைநகர் தொகுதியில் போட்டியிடும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது சொத்து விவரங்களை அறிவித்துள்ளார். அதன் மொத்த மதிப்பு ரூ.3.4 ஆகும். கடந்த 2015ல் 2.1 கோடியாக இருந்த சொத்து மதிப்பு தற்போது 1.3 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது என்று தனது தேர்தல் பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் ஆணையத்திற்கு சமர்ப்பித்த பிரமாணப் பத்திரத்தில் கெஜ்ரிவால் அளித்துள்ள விவரங்களின் படி ரொக்கம் மற்றும் முதலீடுகள் போன்ற அசையும் சொத்துக்களை ரூ.9,95 லட்சம் எனவும், அவரது மனைவி சுனிதா கெஜ்ரிவால், ரூ.12 லட்சம் மதிப்புள்ள 320 கிராம் தங்கம் மற்றும் 1 கிலோ வெள்ளி மதிப்பு ரூ.40,000 உட்பட மொத்தம் ரூ.57.07 லட்சம் எனவும் அறியப்பட்டது.
2015 ஆம் ஆண்டில்இ கெஜ்ரிவால் ரூ.2.26 லட்சம் மதிப்புள்ள அசையும் சொத்துக்களையும் அவரது மனைவி 15.28 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களையும் வைத்திருந்தார்கள்.
ஆனால், கெஜ்ரிவால் மற்றும் அவரது மனைவி சுனிதா இருவரின் வருமாமும் 2014-15 ல் முறையே 7.42 மற்றும் 12.08 லட்சத்திலிருந்து 2018-19ல் ரூ.2.81 லட்சம் மற்றும் 9.94 லட்சமாகக் குறைந்துள்ளது.
சுனிதா கெஜ்ரிவால், தன்னார்வ ஓய்வூதிய சலுகையாக ரூ.32 லட்சம் மதிப்புள்ள ரொக்கம் மற்றும் நிலையான வைப்புத்தொகையும் பெற்றிருப்பதாகவும், மீதமுள்ளவை சேமிப்பு என்றும் பிடிஐ தெரிவித்துள்ளது. கெஜ்ரிவால் தன்னிடம் ரூ.12000 மற்றும் தனது மனைவியிடம் ரூ.9000 ரொக்கமாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் 51 வயதான இந்த அரசியல்வாதி, ஒரு வாக்காளராக புதுடெல்லி தொகுதியில் அல்லாமல், சாந்தினி சவுக்கில் பதிவு செய்துள்ளார்.அவரது பெயரில் ஒரு வாகனம் கூட இல்லை. ஆனால், அவரது மனைவிக்கு ரூ.6.20 லட்சம் மதிப்புள்ள மாருதி பலேனோ உள்ளது. மேலும், சுனிதா பொது வருங்கால வைப்பு நிதி மற்றும் எஸ்பிஐ மியூச்சுவல் ஃபண்டுகளிலும் முதலீடு செய்துள்ளார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கெஜ்ரிவாலின் அசையா சொத்துக்களின் மதிப்பு ரூ.92 லட்சத்திலிருந்து ரூ.1.77 கோடியாக உயர்ந்துள்ளது. சுனிதாவின் அசையா சொத்துக்களில் எந்த மாற்றமும் இல்லை.