சென்னை: கீழடி ஆய்வு அறிக்கையை ஏற்க மறுக்கும் மத்தியஅரசை கண்டித்து, இன்று முற்பகல் திமுக மாணவர் அணி சார்பில், மதுரையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளாக கலந்துகொள்ளும்படி திமுகவினருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
“ஒன்றிய அரசின் மறுப்புகளுக்கு எதிராக, நம் இனத்தின் உரிமைகளை உறுதியாக வெளிப்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணையின் படி அழைக்கிறது மாணவர் அணி!” தமிழரின் தொன்மையை காக்க இனுற (ஜூன் 18) மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் மாணவரணி செயலாளர் ராஜீவ்காந்தி அறிவித்திருந்தார்.

தமிழ்நாட்டில் கழகத் தலைவர் தலைமையிலான அரசு அமைந்ததும் கீழடி அகழாய்வுக்குப் புத்துயிர் கொடுத்ததோடு துரிதமாக பலகட்ட ஆய்வுகள் நடத்தி அருங்காட்சியகத்தையும் கட்டியெழுப்பினார். அறிவியல்பூர்வமாக கீழடி அகழாய்வுகள் நிரூபிக்கப்பட்ட பிறகும் அதை ஏற்று ஆய்வை வெளியிட மறுக்கும் தமிழர் விரோத பா.ஜ.க அரசைக் கண்டித்து வருகிற ஜூன் 18ஆம் தேதி காலை 10 மணிக்கு தி.மு.க. மாணவர் அணி சார்பில், “மதுரை, வீரகனூர் சுற்றுச்சாலை”யில் “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்” நடைபெறும் என அறிவித்திருந்தார். அதன்படி இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
திமுக மாணவர் அணி நடத்தவுள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று ஒன்றிய அரசுக்கு நமது தமிழ்நாட்டின் உணர்வை வெளிப்படுத்து வோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததும் கீழடி அகழாய்வுக்குப் புத்துயிர் கொடுத்ததோடு துரிதமாக பலகட்ட ஆய்வுகள் நடத்தி அருங்காட்சியகத்தையும் கட்டியெழுப்பினார். அறிவியல்பூர்வமாக கீழடி அகழாய்வுகள் நிரூபிக்கப்பட்ட பிறகும் அதை ஏற்று ஆய்வை வெளியிட மறுக்கும் தமிழர் விரோத பாஜ அரசைக் கண்டித்து ஜூன் 18ம் தேதி(இன்று) காலை 10 மணிக்கு திமுக மாணவர் அணி சார்பில், மதுரை, வீரகனூர் சுற்றுச்சாலையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக மாணவர் அணிச் செயலாளர் ராஜீவ்காந்தி அறிவித்து இருந்தார். அதன்படி இன்று திமுக மாணவர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளாகக் கூடி ஒன்றிய அரசுக்கு நமது தமிழ்நாட்டின் உணர்வை வெளிப்படுத்துவோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இது தொடர்பாக திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைத்தளம் பதிவில் கூறியிருப்பதாவது: எத்தனை எத்தனை தடைகள் நம் தமிழினத்துக்கு? அத்தனையையும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக எதிர்த்துப் போராடி, அறிவியல் துணைக்கொண்டு நம் இனத்தின் தொன்மையை நிறுவி வருகிறோம்! இருந்தும் ஏற்க மறுக்கின்றன சில மனங்கள். திருத்த வேண்டியது அறிக்கைகளை அல்ல; சில உள்ளங்களை! நாளை(இன்று) மதுரை வீரகனூரில், திமுக மாணவர் அணி நடத்தவுள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளாகக் கூடி ஒன்றிய அரசுக்கு நமது தமிழ்நாட்டின் உணர்வை வெளிப்படுத்துவோம்! அவர்களைத் திருத்துவோம்!
இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.
அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள பதிவில்ர, அறிவியல்பூர்வமாக கீழடி அகழாய்வுகள் நிரூபிக்கப்பட்ட பிறகும் அதை ஏற்று ஆய்வை வெளியிட மறுக்கும் தமிழர் விரோத பா.ஜ.க அரசைக் கண்டித்து வருகிற ஜூன் 18ஆம் தேதி காலை 10 மணிக்கு தி.மு.க. மாணவர் அணி சார்பில், “மதுரை, வீரகனூர் சுற்றுச்சாலை”யில் “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்” நடைபெறும் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், இது குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு, “தமிழினத்தின் பெருமைக்கும், தொன்மைக்கும் பங்கம் விளைவிக்கும் எத்தனையோ தடைகளைக் கடந்து, அறிவியல் ஆதாரங்களுடன் நம் மரபை மொழியின் பெருமையை உலகறியச் செய்து வருகிறோம். ஆனால், சில மனங்கள் இன்னும் உண்மையை ஏற்க மறுக்கின்றன. இத்தகைய மறுப்புகளை எதிர்கொள்ள, அறிக்கைகள் மட்டும் போதாது; மாறாக, சில மனங்களை மாற்ற வேண்டிய கடமை நம்முன் உள்ளது!!
இன்று (ஜூன் 18) மதுரை விரகனூரில் கழக மாணவரணி நடத்தவுள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாட்டின் உணர்வை உலகறியச் செய்ய பெருந்திரளாகக் கூடிடவேண்டும்! ஒன்றிய அரசின் மறுப்புகளுக்கு எதிராக, நம் இனத்தின் உரிமைகளை உறுதியாக வெளிப்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணையின் படி அழைக்கிறது மாணவர் அணி!” என தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
கீழடி விவகாரம்: மத்திய பாஜக அரசை கண்டித்து மதுரையில் 18ந்தேதி திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு…