ராதே ஷியாம் படத்தை தொடர்ந்து பிரபாஸ் நடிக்கும் படம் பிரபாஸ் 21. மகாநதி/நடிகையர் திலகம் படத்தை இயக்கிய நாக் அஸ்வின் இயக்கும் இந்த படத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடிக்கிறார்.

இதனையடுத்து பிரபாஸ் நடிக்கும் பிரபாஸ் 22 படத்தை இயக்குநர் ஓம் ராவத் இயக்குகிறார். ஆதிபுருஷ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படம் பிரம்மாண்ட 3டியில் உருவாகவுள்ளது. ராமாயணம் தொடரை மையமாக கொண்ட இந்த பிரம்மாணட படைப்பு இந்தி மற்றும் தெலுங்கில் படமாகிறது. இந்த 3டி கொண்டாட்டம் தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் பல வெளிநாட்டு மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகவுள்ளது.

இந்த படத்தில் முக்கிய வில்லன் வேடத்தில் சைப் அலி கான் நடிக்கவுள்ளார். இந்த படம் 2022 ஆகஸ்ட் மாதம் 11ஆம் தேதி வெளியாகும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகவுள்ள இந்த படத்தில் தற்போது கீர்த்தி சுரேஷ் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் ராம் கதாபாத்திரத்தில் பிரபாஸூம் ராவணன் கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் சையஃப் அலி கானும் சீதை கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷூம் நடிக்கவிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

முன்னதாக தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிப்பில் உருவான ஸ்ரீ ராம ராஜ்ஜியம் படத்தில் நயன் தாரா சீதையாக நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து சீதை கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளார் .

 

[youtube-feed feed=1]