தனியார் தொலைக்காட்சியில் அமிதாப்பச்சன் தொகுத்து வழங்கும் கோடீஸ்வரன் ( கான் பனேகா குரோர்பதி_) நிகழ்ச்சியின் 12 –வது சீசன் இப்போது நடந்து வருகிறது.
இந்த சீசனில் கடந்த புதன்கிழமை அனுபா தாஸ் என்ற பெண் ஒரு கோடி ரூபாய் பரிசை தட்டிச்சென்றுள்ளார்
(இந்த சீசனில், கோடி ரூபாய் பெறும் மூன்றாவது போட்டியாளர் இவர்.).
அதிர்ஷ்டம் இருந்தும் அவரால் 7 கோடி ரூபாய் பரிசை அள்ளமுடியவில்லை/ நடந்தது என்ன?
அமிதாப்பச்சன் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் சரியாக பதில் சொல்லி அசத்தி ஒரு கோடி ரூபாய் பரிசை அனுபா பெற்றிருந்தார்.
அடுத்து 7 கோடி ரூபாய்க்கான கேள்வி அவரிடம் கேட்கப்பட்டது.
சரியான பதில் சொன்னால் 7 கோடி ரூபாய் கிடைக்கும்,. தவறான பதில் சொன்னால், ஏற்கனவே வென்ற ஒரு கோடியும் பறிபோய்விடும்.
இதனால் ‘’ஒரு கோடியே போதும்’’ என தெரிவித்து போட்டியில் இருந்து விலகி கொண்டார்.
போட்டியில் இருந்து விலகிய நிலையில் அனுபா தாசிடம் அந்த கேள்விக்கான பதில் கேட்கப்பட்டது.
இதற்கு அவர் தவறாக பதில் சொன்னாலும், ஒரு கோடிக்கு பாதிப்பு இருக்காது.
அவரது, துரதிருஷ்டம் பாருங்கள்!.
போட்டியில் இருந்து விலகிய பின், அனுபா தாஸ், சரியான பதிலை அளித்திருந்தார்.
விலகாமல் பதில் அளித்திருந்தால் 7 கோடியை தட்டி சென்றிருக்கலாம்.
அது என்ன கேள்வி தெரியுமா?
’’ ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் ரியாஸ் பூனாவாலாவும், சவுகத் துகன் வாலாவும் இடம் பெற்றிருந்த அணி எது ?’’ என்பது கேள்வி.‘’ கனடா, ஐக்கிய அமீரகம்,கென்யா, ஈரான் ஆகிய நான்கு விடைகளில் இருந்து ஒன்றை தேர்வு செய்ய வேண்டும்’- என்பது அவருக்கு அளித்த ‘’சாய்ஸ்’.
ஐக்கிய அமீரகம் என அனுபா பதில் அளித்தார்.
‘’ நீங்கள் சொன்னது சரியான விடை’’ என அமிதாப்பச்சன் சொன்னபோது, விக்கித்து போனார், அனுபா.
வட போச்சே? என்ற ஆதங்கமாக இருக்கலாம்.
ஒரு வேளை தவறாக பதில் சொல்லி இருந்தால் மொத்த பணமும் போயிருக்குமே?
-பா.பாரதி.