
அஸ்தானா,
கஜகஸ்தான் நாட்டில் ஓடும் பஸ்சில் தீபிடித்த விபத்தில் அதில் பயணம் செய்தி 57 பேரில், 52 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இன்று காலை இந்திய நேரப்படி காலை 10.30 மணி அளவில் இந்த கோரமான தீவிபத்து ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
கஜகஸ்தான் நாடு, ஆசிய கண்டத்தில் உள்ளது. இங்குள்ள அக்டோபே மாநில பகுதியில் நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த பஸ் திடீரென தீப்பிடித்த் எரிந்தது.
இந்த பஸ்சில் 55 பயணிகள் மற்றும் 2 டிரைவர்கள் இருந்தாகவும், அதில் 52 பேர் தீயில் கருவி இறந்துவிட்டதாகவும் மற்ற 5 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக மாநில தகவல் தெரிவிக்கிறது.
Patrikai.com official YouTube Channel