பெங்களூரூ

கர்நாடக அரசு பட்ஜெட்டில் அனுமன் பிறந்த அஞ்சனாத்ரி மலை சர்வதேச தரத்துக்கு மேம்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

அனுமன் பிறந்ததாகக் கூறப்படும் அஞ்சனாத்ரி மலை கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டத்தில் உள்ளது.  இங்கு ஆண்டு தோறும் அனுமன் ஜெயந்தி அன்று பக்தர்கள் பலர் பாதயாத்திரையாக வருவது வழக்கமாகும்.  அஞ்சனாத்ரி மலை கர்நாடக மாநிலத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. 

முந்தைய பாஜக ஆட்சியில் ரூ.100 கோடி செலவில் அஞ்சனாத்திரி மலையில் ரோப் கார் உள்ளிட்ட சுற்றுலா வசதிகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகளும் தொடங்கியது. இந்நிலையில் கர்நாடகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. புதிதாகப் பதவி ஏற்ற காங்கிரஸ் அரசு அஞ்சனாத்ரி மலையில் சுற்றுலா வசதிகள் செய்து கொடுக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

இன்று பட்ஜெட் தாக்கல் செய்தபோது முதல்வர் சித்தராமையா,

”அனுமன் பிறந்த இடமாக கருதப்படும் அஞ்சனாத்ரி மலை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் ரூ.100 கோடி செலவில் சுற்றுலா வசதிகள் மேம்படுத்தப்படும். அஞ்சனாத்ரி மலைப் பகுதி சர்வதேச தரத்திற்கு மாற்றப்படும் ” 

என்று தெரிவித்துள்ளார்.