புளோரிடா: அமெரிக்க விண்வெளி வீராங்கனை கேட் ரூபின்ஸ், அதிபர் தேர்தலுக்கான தனது வாக்கை விண்வெளியிலிருந்தே இரண்டாவது முறையாக பதிவுசெய்துள்ளார்.
கடந்த 2016ம் ஆண்டு முதன்முறையாக அதிபர் தேர்தலுக்கான தனது வாக்கை விண்வெளியிலிருந்து பதிவுசெய்தார் ரூபின்ஸ். குறை புவி சுற்றுப்பாதையில் இருந்துகொண்டு இவர் தனது வாக்கைப் பதிவுசெய்தார்.
அமெரிக்க விண்வெளி வீரர்கள், தேர்தலின்போது விண்வெளியில் இருந்தால், அவர்கள், தங்களுடைய வாக்குகளை அங்கிருந்தே பதிவுசெய்யும் வகையில், கடந்த 1997ம் ஆண்டு அமெரிக்காவில் சட்டம் கொண்டுவரப்பட்டது.
அதுமுதற்கொண்டு, பல விண்வெளி வீரர்கள், இந்த சலுகையை அனுபவித்து வாக்களித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.