சென்னை:  கச்சத்தீவு ஆலய திருவிழாவையொட்டி,  அந்த பகுதிகளில் மீன்பிடிக்க தமிழக மீனவர்களுக்கு  5 நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழா பிப்ரவரி 27, 28 (2026) ஆகிய நாட்களில் நடைபெறுவதையொட்டி, தமிழ்நாட்டைச் சேர்ந்த சுமார் 3,996 பக்தர்கள், 118 படகுகளில் (75-92 விசைப்படகுகள், 26 நாட்டுப்படகுகள்) புனித பயணம் மேற்கொள்ள பதிவு செய்துள்ளனர். இந்ததிருவிழாவுக்கான கொடியேற்றம் 27ந்தேதி நடைபெறுகிறது. தொடர்ந்து இரு நாட்கள் விழா நடைபெற உள்ளது. இதில், தமிழகம் மற்றும் இலங்கையை சேர்ந்த மீனவர்கள் கலந்துகொள்ள உள்ளனர். இந்த திருவிழா இந்தியா-இலங்கை இருநாட்டு நல்லுறவை மேம்படுத்தும் வகையில் நடைபெறுகிறது.
கச்சத்தீவு விழாவில் கலந்து கொள்ள ராமேசுவரம் துறைமுகத்திலிருந்து 27-ம் தேதி காலை படகுகள் புறப்படுகின்றன. இதற்காக  75 விசைப்படகுகளும் 26 நாட்டுப்படகுகளும் என மொத்தம் 101 படகுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த படகுகளில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் செல்ல உள்ளனர். இந்தநிலையில் கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழாவிற்கு செல்லும் நாட்டுப்படகுளை மீன்வளத்துறை துணை இயக்குனர் சின்ன குப்பன் தலைமையில் ராமேசுவரம் உதவி இயக்குனர் தமிழ்மாறன், மண்டபம் இயக்குனர் சிவக்குமார் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

இந்தநிலையில் கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழாவிற்கு செல்லும் நாட்டுப்படகுளை மீன்வளத்துறை துணை இயக்குனர் சின்ன குப்பன் தலைமையில் ராமேசுவரம் உதவி இயக்குனர் தமிழ்மாறன், மண்டபம் இயக்குனர் சிவக்குமார் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது படகின் உறுதித்தன்மை, என்ஜின் தரம் குறித்து ஆய்வு செய்தனர். இதேபோல் ராமேசுவரம் துறைமுக பகுதியில் விசைப்படகுகளையும் ஆய்வு செய்தனர்.

இதையடுத்ரது,  கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு இன்று முதல் 1-ந்தேதி வரை 5 நாட்கள் ராமேசுவரம், பாம்பன், மண்டபம், தங்கச்சிமடம், தனுஷ்கோடி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விசைப்படகு மற்றும் நாட்டுப்படகுகள் மீன்பிடிக்க செல்லக்கூடாது என்று மீன்வளத்துறை அதிகாரிகள் தடை விதித்து உள்ளனர்.

[youtube-feed feed=1]