ஸ்ரீநகர்: மோசமான வானிலை காரணமாக ராகுலின் ஒற்றுமை யாத்திரை இ,ன்று பிற்பகல் முதல்  ரத்து செய்யப்பட்டுள்ளது. மீண்டும் வெள்ளிக்கிழமை (28ந்தேதி) முதல் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ராகுல்காந்தியின் ஒற்றுமை யாத்திரையான பாரத் ஜோடோ யாத்திரை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. குமரியில் இருந்து தொடங்கிய யாத்திரை தற்போது ஜம்மு காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. ஆனால், அங்கு நிலவி வரும் மோசமான வானிலை, பனிப்பொழிவு மற்றும் நிலச்சரிவு காரணமாக, இன்றைய பிற்பகல் முதல் நாளை வரை யாத்திரை ஒத்தி வைக்கப்படுவதாக மூத்த காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் அறிவித்துள்ளார்.

ராகுலின் யாத்திரை கடந்த 19-ந் தேதி காஷ்மீருக்குள் நுழைந்த நிலையில்,  நேற்று ஜம்மு பிராந்தியத்தில் நக்ரோடா நகரில் ராணுவ பாதுகாப்பு அரண் அருகே காலை 8 மணியளவில் பாதயாத்திரை புறப்பட்டது.  இன்று மீண்டும்,  காஷ்மீரின் ராம்பன் பகுதியிலிருந்து தொடங்கியது பனிஹால் நகரம் நோக்கி சென்று கொண்டிருந்தது.

அப்போது, கனமழை காரணமாக அந்த சாலை பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இருந்தாலும் ராகுல் தொடர்ந்து,  கொட்டும் மழையில்  பனிஹால் நகரம் நோக்கி யாத்திரை மேற்கொண்டார். அப்போது, சில இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது.

இதையடுத்து, ராகுலின் யாத்தி ரத்து செய்யப்பட்து. தொடர்ந்து, இன்று மாலை நடைபெற இருந்த ராகுல்காந்தியின் நடைப்பயணமும், நாளை (26ந்தேதி) நடை பயணமும் ரத்து செய்யப்படுவதாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

 நாளை ஓய்வு நாளாக  அறிவிக்கப்பட்டுள்ளதால் வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு மீண்டும் நடைப்பயணம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.