ஸ்ரீநகர்,
காஷ்மீரில் சமீப காலமாக ராணுவத்துக்கு எதிராக அங்குள்ள இளைஞர்கள் கற்களை எறிந்து எதிர்தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து, ஹிந்துஸ்தான் டைம்ஸ் நிருபர் வினோத் ஷர்மா, சமீபத்தில் காஷ்மீர் சென்று நேரடி கள ஆய்வு செய்தார். அப்போது அவருக்கு ஏற்பட்ட அனுபவங்கள் தொகுக்கப்பட்டுள்ளது.
அவர் கூறியிருப்பதாவது,
ஸ்ரீநகரிலிருந்து 50 கிமீ தள்ளியிருந்த பாதிக்கப்பட்ட ஒரு தெற்கு திசையின் ஒரு பகுதியில் அவர் மூன்று கல்லெறி வீரர்களை சந்தித்துள்ளார். இளைஞர்களான ஜகாங்கீர், ஓமர் என்ற இளைஞர்கள் தங்களது அனுபவம் குறித்து கூறியதாவது,
ஜகாங்கீர் என்பவர் தாங்கள் கல்லெறி வீரர்கள் என்றும், எங்களுக்கு சுதந்திரம் தேவை என்றும் தெரிவித்திருந்தார். அதற்கு செய்தியாளர், சுதந்திரம் இந்தியாவிடமிருந்தா இல்லை வேறு யாரிடமாவதிருந்தா என கேள்வி எழுப்பியதற்கு,
சிறிது மௌனத்துக்குப்பின் இந்தியாவிடமிருந்தும், ஒடுக்குமுறையிடமிருந்தும் சுதந்திரம் தேவை என்றும், மாணவர்களான தங்களை போலீஸ் கைது செய்து அடித்து, தங்களையும், தங்களின் குடும்பத்தினரையும் கடும் சித்திரவதை செய்ததாக கூறினர்.
அவர்களிடம் தொடர்ந்து பேசிய அரைமணி நேரத்தில், அவர்கள் போலீஸின் துன்புறுத்தல் பற்றியும், அங்குள்ள இளைஞர்களுக்கு போலீசார் செய்துவதும் கொடுமைகளைப் பற்றியும் விவரித்து கூறியதாக சொல்லியிருக்கிறதார்.
மேலும் பேசுகையில், போராளிகளின் தலைவர்களில் ஒருவனான ஜாகிர் மூசாவை பற்றி தங்களுக்கு தெரியும் என்றும், மூசா மட்டும் அல்ல, துப்பாக்கி வைத்திருக்கும் அனைவருமே தங்களின் தலைவன் எனவும் கூறி அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கின்றனர்.
ஆனால், இஸட் பாதுகாப்பு செக்யூரிட்டியுடன் இருக்கும் ஹுரியத் தலைவர் சையட் அலி ஷா கிலானி தங்கள் தலைவர் அல்ல என்றும், பாதுகாப்புப்படை வீரர்களால் கொல்லப்பட்ட ஒவ்வொரு இளைஞனின் தந்தையும் தங்கள் தலைவர் எனவும், தங்களைப் பொறுத்தவரை மூசா எஞ்சினீயராக வேண்டிய ஒருவர், ஆனால், துரதிருஷ்டவசமாக துப்பாக்கியை தூக்க வைக்கப்பட்டவர் என்றும் கூறினர்.
மேலும், மருத்துவர் ஆக விரும்பிய ஓமரும், ஜகாங்கீரும், துப்பாக்கி கிடைக்காததால் கற்களை ஆயுதமாக்கியதாக கூறி இருக்கிறார்கள்.
சட்டப்படி இவை எல்லாம் நடைபெற இயலாது என பலமுறை அவர்களிடம் கூறிய பின், ஏமாற்றம் தெரியும் கண்களுடன் அவர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறாது என புரிந்துக் கொண்டு, தங்களால், சுதந்திரமாக வாழ முடியாத நிலையில் வேலை, தொழில் எதையும் சிந்திக்கும் நிலையில் தாங்கள் இல்லை என கூறியது தனது மனதுக்கு வலியை தந்தது என்று கூறி உள்ளார்.
Credit: Hindustan times