ஜம்மு:
காஷ்மீரில் தீவிவாத தலைவர் புர்ஹான் வானி பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதை தொடர்ந்து ஏற்பட்ட வன்முறை தொடர்கிறது. இதில் இன்று 8 பேர் பலியானார்கள்.
காஷ்மீரில், தீவிரவாத தலைவர்களில் ஒருவரான 21 வயதான புர்ஹான் வானி, கடந்த வெள்ளிக்கிழமை பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டார்.
இதைத் தொடர்ந்து அம்மாநிலத்தில் வன்முறை வெடித்து பரவியது. இதையடுத்து இணையதளம் மற்றும் தொலைபேசி சேவைகளை அதிகாரிகள் தற்காலிகமாக நிறுத்தியுள்ளனர். தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. நகரங்களுக்கு இடையிலான ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. அமர்நாத் யாத்திரையும் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
மாநிலத்தின் முக்கியப் பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பிரிவினைவாத தலைவர்கள் போராட்டத்தில் பங்கெடுப்பதைத் தடுக்கும் வகையில், அவர்களது வீடுகளைச் சுற்றி பாதுகாப்புப் படையினர் நிறுத்தப்பட்டு இருக்கிறார்கள். ஆனால், கட்டுப்பாடுகளையும் மீறி ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். “அவர்கள் ள் வன்முறையில் இறங்கியதால் அவர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள்” என்று அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலியானார்கள். இன்னொருவர், . ஆர்ப்பாட்டக்காரர்களை காவல்துறையினர்ர் விரட்டியபோது, இளைஞர் ஒருவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். வேறு சில அசம்பாவித நிகழ்வுகளில் ஐவர் பலியானார்கள். பன்னிரண்டுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் காயமடைந்திருப்பதாக பல்வேறு மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஊரடங்கு உத்தரவையும் மீறி, ஆயிரக்கணக்கானவர்கள், புர்ஹான் வானியின் சொந்த ஊரான ட்ராலுக்கு சென்று அவரது இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றனர்.
அந்தப் பகுதியில் இரண்டு காவல் நிலையங்களையும், ஒரு போலீஸ் சோதனைச் சாவடியையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தீ வைத்துக் கொளுத்தினர். மற்ற பகுதிகளிலும் ஆர்ப்பாட்டங்கள் தொடர்கின்றன.