க்னோ

நேற்று முன் தினம் காவி உடை அணிந்த இந்து மத வெறியர்களால் தாக்கப்பட்ட காஷ்மீர் வியாபாரி இன்று மீண்டும் வியாபாரத்தை தொடங்கி உள்ளார்.

சென்ற மாதம் 14 ஆம் தேதி புல்வாமாவில் நடந்த ஜெய்ஷ் ஈ முகமது தற்கொலைப்படை தாக்குதலில் 40 சி ஆர் பி எஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர்.  அதை தொடர்ந்து காஷ்மீரிகள் மீது தாக்குதல் தொடர்ந்து நடைபெறுகிறது.   காஷ்மீர் மாணவர்கள் பலர் இந்த தாக்குதலுக்கு பயந்து கல்வி நிலையங்களுக்கு செல்லாமல் உள்ளனர்.

உத்திரப் பிரதேச மாநிலம் லக்னோவில் காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த இருவர் உலர் பழங்களை (DRY FRUITS) சாலையில் வைத்து வியாபாரம் செய்து வந்தார்கள்.  அவர்களை நேற்று முன் தினம் காவி உடை அணிந்த சில இந்து மத வெறியர்கள் அடித்து உதைத்துள்ளனர்.

இந்த வீடியோ சமுக வலை தளங்களில் பரப்பப்பட்டு வைரலாகியது.   வீடியோ மூலம் தாக்கியவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.   லக்னோ நகர காவல்துறையினர் அவர்கள் மீது வழக்கு  பதிந்து கைது செய்துள்ளனர்.   இது குறித்து மேலும் விசாரணை நடந்து வருகிறது.

தாக்கப்பட்ட இருவரில் ஒருவரான அப்துல் சலாம் இன்று மீண்டும் லக்னோவில் தனது வியாபாரத்தை தொடங்கி உள்ளார்.  லக்னோ நகர பொதுமக்கள் அவருக்கு ஆதரவு அளித்து வருகின்றனர்.   மீண்டும் வியாபாரத்தை தொடங்கியதில் மகிழ்ச்சி அடைந்துள்ளதாக அப்துல் சலாம் தெரிவித்துள்ளார்.