ஸ்ரீநகர்,
காஷ்மீரில் நடைபெற்ற உள்ளூர் கிரிக்கெட் போட்டியின் போது, அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் பாகிஸ்தான் அணியினர் போன்ற சீருடை அணிந்தும், பாகிஸ்தான் தேசிய கீதம் பாடியும் விளையாடினர்.
நாடுகளுக்கு இடையே கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பிக்கும்போது அந்தந்த நாட்டின் தேசிய கீதம் இசைக்கப்படுவது வழக்கம். ஆனால், காஷ்மீர் உள்ளுர் இளைஞர்கள் பாகிஸ்தான் தேசிய கீதம் இசைத்து விளையாடியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி உள்ளது.
பாகிஸ்தானின் பச்சை சீருடை அணிந்திருந்த அந்த அணியின் பெயர் பாபா தர்யா உத்தின். இந்த பெயர் கண்டர்பாலில் அமைந்துள்ள புகழ்பெற்ற மசூதியில் உள்ள துறவியின் பெயர்.
மற்றொரு அணி வெள்ளை சீருடை அணிந்து இருந்தது. இந்த மைதானமும் உள்ளூர் காவல் நிலையம் அருகே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது
தெற்கு காஷ்மீரில் உள்ள கண்டேர்பாலில் உள்ள மைதானத்தில் கடந்த 2 ந்தேதி இந்த போட்டி நடைபெற்றுள்ளது.
காஷ்மீரில் ஆசியாவின் மிகநீளான குகை நெடுஞ்சாலையை பிரதமர் மோடி திறந்து வைத்த அன்று இந்த போட்டி நடைபெற்றுள்ளது.
அன்றுதான் காஷ்மீரின் ஷெனனி நஷ்ரி பிரிவினைவாதிகள் சுரங்க பாதையை திறந்து வைக்க வந்த பிரதமர் மோடிக்கு நாங்கள் எங்கள் அணியை மிக வித்தியாசமாக காட்ட எண்ணினோம் எதிராக பந்து நடத்த அழைப்பு விடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
[youtube https://www.youtube.com/watch?v=XbnpvN1-hLE]