ஜம்மு
காஷ்மீர் மாநிலம் அமர்நாத் கோவில் அருகே பாகிஸ்தானியர் கண்ணி வெடி வைத்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டதால் அமர்நாத் பயணிகளைத் திரும்பிச் செல்ல அரசு உத்தரவிட்டுள்ளது.
காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அமர்நாத் கோவிலில் தற்போது பனி லிங்க தரிசன யாத்திரை நடந்து வருகிறது. தானாகவே உருவாகும் இந்த பனி லிங்கத்தைக் காண கடந்த மாதம் 1 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 15 வரை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதையொட்டி பல்லாயிரக்கணக்கான மக்கள் அமர்நாத் கோவிலுக்கு தினம் சென்று வருகின்றனர்.
இந்நிலையில் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் அமர்நாத் பயணிகளிடையே தீவிரவாதச் செயல்கள் செய்ய உள்ளதாக ரகசியத் தக்வல் கிடைத்தது. இந்திய ராணுவம் இந்த பகுதிகளில் கடும் சோதனை இட்டது. அப்போது பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதிகள் கண்ணி வெடி வைத்திருந்தது கண்டறியப்பட்டதால் சோதனை மேலும் தீவிரமானது.
இந்த சோதனையில் ஒரு தீவிர வாத முகாமில் பல வெடிகுண்டுகள் பதுக்கி த்துள்ளது கண்டறியப்பட்டது. இவற்றின் மூலம் அமர்நாத் பயணிகள் இடையே பயங்கரவாத தாக்குதல் நடத்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் திட்டமிட்டது தெரிய வந்துள்ளது. இது காஷ்மீர் மாநிலத்தில் கடும் பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது.
இதையொட்டி காஷ்மீர் மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “அமர்நாத் யாத்திரை செல்லும் பயணிகளுக்கு தற்போது பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளது. இதனால் அவர்கள் காஷ்மீர் பள்ளத்தாக்கில் தங்கும் திட்டத்தை ரத்து செய்து விட்டு உடனடியாக திரும்பிச் செல்ல வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என அறிவித்துள்ளது.