பாக்.கின் கொரோனா சதி..எச்சரிக்கும் காஷ்மீர் டிஜிபி..

காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் இருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ள கண்டர்பால் என்ற இடத்தில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களுக்கான மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது.

அதனை ஜம்மு-காஷ்மீர் போலீஸ் டி.ஜி.பி.தில்பக் சிங் பார்வையிட்டார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிக்குள், கொரோனா நோயாளிகளை அனுப்பும் முயற்சியில் பாகிஸ்தான் இறங்கியுள்ளதாகக் குற்றம் சாட்டினார்.

‘’இதுவரை தீவிரவாதிகளை இந்தியாவுக்குள் , ஊடுருவச் செய்து வந்த பாகிஸ்தான் இப்போது, கொரோனா வைரஸ் பாதித்தோரை ஊடுருவச் செய்யும் காரியத்தில் ஈடுபட்டுள்ளதாகக் குறிப்பிட்ட டி.ஜி.பி-தில்பக் சிங்,’’ இதற்குத் தகுந்த ஆதாரங்கள் உள்ளன’ என்றார்.

பாகிஸ்தானில் கொரோனாவுக்கு இதுவரை 224 பேர் உயிர் இழந்துள்ளதும், 10 ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

 

– ஏழுமலை வெங்கடேசன்