ஸ்ரீநகர்:

காஷ்மீரில் பிஎஸ்எப் முகாமிற்குள்  அதிகாலையில் பயங்கரவாதிகள் நுழைந்து  திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த துப்பாக்கி சூட்டில் 3 வீரர்கள் காயமடைந்தனர்.

இந்திய வீரர்கள் திருப்பி தாக்கியதில் பயங்கரவாதிகள் இரண்டுபேர் சுட்டு கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து, விமான நிலையத்திற்கு செல்லும் அனைத்து பாதைகளும் அடைக்கப்பட்டன.  காலையில் கிளம்ப வேண்டிய அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டதோடு,  ஸ்ரீ நகர் விமான நிலையம் தாற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் விமான நிலையம் அருகேயுள்ள பிஎஸ்எப் முகாம் உள்ளது. இந்த முகாமிற்குள்  பாதுகாப்பையும் மீறி பயங்கரவாதிகள் நுழைந்து தாக்குதல் நடத்தி உள்ளனர்.ங

இன்று அதிகாலை 3.45 மணியளவில் இந்த தாக்குதல் நடைபெற்றது.   உடனடியாக பாதுகாப்பு வீரர்களும் எதிர்  தாக்குதல் நடத்தினர். இதில் இரு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்னர். மேலும் சில பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறசது.

தற்போது அந்த முகாம் ஹெலிகாப்டர் மூலம் அந்த முகாம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. அந்த பகுதியை பாதுகாப்பு வீரர்கள் சுற்றி வளைத்துள்ளனர்.

இதனிடையே, பயங்கரவாதிகள் தாக்குதல் தொடர்ந்து, காலை டில்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் , உயர்மட்ட ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.