சென்னை

ருணாநிதி நினைவு ரூ. 100 நாணயம் இன்று நடிகர் ரஜினிகாந்துக்கு அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 18 ஆம் தேதி மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழாவின் அடையாளமாக அவரது உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயத்தை மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் வெளியிட்டார். தி.மு.க. தலைமை நிலையமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் கிடைக்கும் இந்த நாணயம் தலா 10 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

அண்ணா அறிவாலயத்திற்கு சென்று அமைச்சர்கள், எம்.பி.க் கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்டச் செயலாளர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆர்வமுடன் நாணயங்களை வாங்கிச் செல்கின்றனர். நேற்று முன்தினம் மட்டும் 500 நாணயங்கள் ரூ.50 லட்சத்துக்கு விற்கப்பட்டுள்ளன.

இந்த நாணயம் தோழமை கட்சித் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. அதன்படி முதல்வர்ர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க கருணாநிதி நூற்றாண்டு நினைவு ரூ.100 நாணயத்தை நடிகர் ரஜினிகாந்திடம் தமிழக வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சி எஸ்.முருகன் அவரது இல்லத்திற்கு நேரில் சென்று வழங்கியுள்ளார்.