சென்னை: கருணாநிதி நினைவிட கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கும் என தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.

பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு இன்று செய்தியாளர்களை சந்தித்தவர்,  ,”மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள மெரினா அண்ணா நினைவிட வளாகத்தில் 2.21 ஏக்கர் பரப்பளவில் ரூ. 39 கோடி மதிப்பீட்டில், நினைவிடம் அமைக்கப்படும் என ஏற்கனவே சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

அதைத்தொடர்ந்து அதுகுறித்து கடந்த செப்.17ஆம் தேதி முதலமைச்சர் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். மேலும், இது தொடர் பாக பொதுப்பணித்துறையினர் தயாரித்த விரிவான திட்ட அறிக்கைக்கு கடற்கரை ஒழுங்குமுறை மண்டலம், சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமமும் அனுமதி அனுமதியளித்துள்ளது. இதைத்தொடர்ந்து, திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு நிதித்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதற்கு ஒப்புதல் கிடைத்தவுடன்,  இன்னும் இரண்டு தினங்களில் அரசாணை வெளியிடப்படும் என்றார்.

மேலும்  அரசாணை வெளியிட்ட பின் நினைவிடப்பணிகள் தொடர்பாக ஒப்பந்தப் புள்ளி கோருவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து நினைவிடப்பணிகள் விரைவில் தொடங்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.