சென்னை:
தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தனது 65 வயது பிறந்தநாளை முன்னிட்டு தனது தந்தையும், கட்சித் தலைவருமான கருணாநிதியிடம் ஆசி பெற்றார்.
இன்று காலை சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடத்தில் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய மு.க. ஸ்டாலின் முன்னதாக, அறிஞர் அண்ணா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.
பிறகு, சென்னை கோபாலபுத்தில் இருக்கும் மு.கருணாநிதியின் இல்லத்துக்குச் சென்ற ஸ்டாலின், அங்கு கருணாநிதியிடம் ஆசி பெற்றார்.
இது குறித்து கருணாநிதியின் முகநூல் பக்கத்தில், “கழக செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது 65வது பிறந்த நாளினை முன்னிட்டு தலைவர் கலைஞர் அவர்களிடம் வாழ்த்து பெற்ற போது: என்று குறிப்பிட்டு மேற்கண்ட படம் வெளியிடப்பட்டுள்ளது.