சென்னை
காங்கிரஸ் எம் பி கார்த்தி சிதம்பரம் யாருடன் கூட்டணி வைத்தாலும் பாஜக தோல்வி அடையும் எனக் கூறியுள்ளார்.
நேற்று மாலை செனை பல்லாவரத்தில் நட்ந்த ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் காங்கிரஸ் எம் பி கார்த்தி சிதம்பர்ம சிறப்பு விருந்தினரகா கலந்துக் கொண்டார். பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களிடம்,
“பா.ஜ.க.வினர் என்ன வேண்டுமானாலும் செய்யலாம், யாருடைய படத்தை வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் இந்தி, இந்துத்துவா அரசியலை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்களை நிராகரித்துக் கொண்டேதான் இருப்பார்கள். பா.ஜ.க. யாருடன் கூட்டணி வைத்தாலும் அந்த கூட்டணி தோல்வியடையும்.”
என்று கூறி உள்ளார்.