கொரோனா அச்சுறுத்தலால் சுமார் 150 நாட்களுக்கு மேலாக எந்தவொரு புதிய படமும் வெளியாகவில்லை. மத்திய, மாநில அரசுகள் சில தினங்களுக்கு முன்பு படப்பிடிப்புகளுக்கு அனுமதியளித்ததை அடுத்து இறுதிக்கட்டப் படப்பிடிப்பு பணிகள் தொடங்கியுள்ளன.
மேலும் மத்திய அரசு அனுமதியால் நவம்பர் மாதத்தில்தான் திரையரங்குகள் திறக்க வாய்ப்புள்ளது. அப்படித் திறக்கப்பட்டாலும், 2021-ம் ஆண்டு பண்டிகைக்கு ‘சுல்தான்’ வெளியீடு எனப் படக்குழு முடிவு செய்துள்ளது.


இது தொடர்பாக கார்த்தி தனது ட்விட்டர் பதிவில், “படப்பிடிப்பு முடிந்தது. மூன்று வருடங்களுக்கு முன் இந்தக் கதையைக் கேட்ட தினத்திலிருந்து இன்று வரை இந்தக் கதை எங்களுக்கு உற்சாகத்தைத் தந்து வருகிறது. இதுவரை நான் நடித்திருக்கும் படங்களில் பிரம்மாண்ட தயாரிப்பு இதுதான். இதில் சிறந்த முயற்சியோடு பணியாற்றிய ஒட்டுமொத்தக் குழுவுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டார்.


‘சுல்தான்’ படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, ”படப்பிடிப்பு முடிந்துவிட்டது. நல்லதொரு பண்டிகை வெளியீட்டுக்காகக் காத்திருக்கிறேன்” என்று தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.