டில்லி:

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தை மேலும் 5 நாள் சி.பி.ஐ. காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி இன்று கைது செய்யப்பட்டு டில்லி சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். மேலும் 14 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரி சிபிஐ மனு தாக்கல் செய்தது.

மனுவை விசாரித்த நீதிமன்றம் மேலும் 5 நாள் காவலில் வைத்து விசாரிக்க சிபிஐ.க்கு அனுமதி அளித்தது. அவரது ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டுளளது. விசாரணை முடிந்து வரும் 6ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும். வீட்டு உணவு வழங்குவதற்கு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்ததோடு, காலை, மாலை தலா ஒரு மணி நேரம் வக்கீலை சந்திக்கவும், டாக்டர்கள் பரிந்துரையின் படி மருந்துகள் வழங்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.