கரசேவகர்கள் தியாகம் வீணாகவில்லை : அயோத்தி தீர்ப்பு குறித்து ராஜ் தாக்கரே

Must read

மும்பை

யோத்தி வழக்கு தீர்ப்பு குறிப்பு மகராஷ்டிர நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே கருத்து தெரிவித்துள்ளார்.

நேற்று உச்சநீதிமன்றம் அயோத்தி வழக்கில் வழங்கிய தீர்ப்பில் சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்ட அனுமதி அளித்தது.   அதற்கு பதிலாக இஸ்லாமியர்களுக்கு மசூதி கட்டிக் கொள்ள 5 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.   அத்துடன் மத்திய அரசு கோவில் அமைக்கும் குழுவை இன்னும் 3 மாதத்தில் அமைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த தீர்ப்புக்கு நாடெங்கும் உள்ள பல அரசியல் தலைவர்கள்  கருத்து தெரிவித்து வருகின்றனர்.   இவர்களில் பெரும்பாலானோர் தீர்ப்பை வரவேற்று கருத்து தெரிவித்துள்ளனர்.

மகாராஷ்டிர நவநிர்மான சேனா கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே, “இந்த தீர்ப்பால் நான் மகிழ்ச்சி அடைந்துள்ளேன்.  சிவசேனா  தலைவர் பால் தாக்கரே உயிருடன் இருந்திருந்தால் மிகவும் மகிழ்ந்திருப்பார்.  ராமர் கோவில் அமைக்க கரசேவகர்கள் செய்த தியாகம் வீணாகவில்லை.  விரைவில் ராமராஜ்யமும் அமைய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

More articles

Latest article