பெங்களுரு

ஜ த எம் பி பிரிஜ்வல் ரேவண்ணா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுவது உறுதி என் கர்நாடக அமைச்சர் ஜி பரமேச்வரா கூறியுள்ளார்.

 

தற்போது கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி எம்.பி.யாக இருக்கும்பிரஜ்வல் ரேவண்ணா (வயது 33). இவர் முன்னாள் அமைச்சரும், ஒலேநரசிப்புரா தொகுதி எம்.எல்.ஏ.வுமான எச்.டி.ரேவண்ணாவின் மகன் ஆவார். தற்போது நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் ஹாசன் தொகுதியில் பிரஜ்வல் ரேவண்ணா பா.ஜனதா கூட்டணியில் ஜனதா தளம் (எஸ்) சார்பில் போட்டியிடுகிறார்.

கடந்த மாதம் சமூக வலைத்தளங்களில் இவர் தொடர்பான சுமார் 2,900 ஆபாச வீடியோக்கள் பரவின. இதையொட்டி பிரஜ்வல் ரேவண்னா கடந்த 27-ந்தேதி இரவு பெங்களூருவில் இருந்து ஜெர்மனிக்கு திடீரென புறப்பட்டு சென்றார். இந்த விவகாரம் அவர் சென்ற பிறகு தீவிரமானது  மக்களவைத் தேர்தல் நடைபெறும் நிலையில் இந்த விவகாரம் கர்நாடகம் மட்டுமின்றி இந்திய அரசியலை உலுக்கியது.

எதிர்க்கட்சிகல் நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் இதை பெரிய ஆயுதமாக பயன்படுத்தி பா.ஜனதா கூட்டணிக்கு எதிராக பிரசாரம் மேற்கொண்டது. எனவே இந்த விவகாரம் பா.ஜனதா கூட்டணி கட்சிகளுக்கு சற்று இக்கட்டான நிலையை ஏற்படுத்தியது.

பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் இந்த விவகாரத்தில் பிரஜ்வல் ரேவண்ணா சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும் என்று கருத்து தெரிவித்தனர். ஆனா; இந்த விவகாரம் பகிரங்கமான பிறகே ஜனதா தளம் (எஸ்) கட்சியில் இருந்து பிரஜ்வல் ரேவண்ணா இடைநீக்கம் செய்யப்பட்டார்.

நேற்று நள்ளிரவு ஜெர்மனியில் தலைமறைவாக இருந்த பிரஜ்வல் ரேவண்ணா நாடு திரும்பினார்.  காவல்துறையினர் அவரை விமான நிலையத்திலேயே கைது செய்த ர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் அதிகாரிகள் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்வது உறுதி என்று கர்நாடக உள்துறை  அமைச்சர் ஜி. பரமேஸ்வரா தெரிவித்தார். ரேவண்ணா அதிகாரிகளுக்கு ஒத்துழைத்ததாக தெரிகிறது என்றும் ஜி. பரமேஸ்வரா கூறினார்.