பெங்களூரு விமான நிலையத்தில் விஜய் சேதுபதியை நபர் ஒருவர் தாக்க முயன்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தற்போது கோலிவுட், டோலிவுட், தாண்டி பாலிவுட்டிலும் பிஸியாக நடிக்க துவங்கியுள்ள விஜய் சேதுபதி, பாலிவுட் வெப்சீரிஸ் ஒன்றில் வில்லனாக நடிக்க ஹீரோவை விட அதிகமாக சம்பளம் வாங்குவதாக கூறப்பட்டது.
இவர் படப்பிடிப்பிற்காக பெங்களூர் சென்ற போது ஏர்போர்ட்டில் இவரை ஒருவர் எட்டி உதைத்து தாக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சில வினாடிகள் மட்டுமே ரெகார்ட் செய்யப்பட்டுள்ள இந்த வீடியோவில், விஜய் சேதுபதி தன்னுடைய பாதுகாவலர்களுடன் சென்றுகொண்டிருக்கும் போது, திடீர் என பின்னால் வரும் நபர் அவரை எட்டி உதைத்து தாக்குகிறார். பின்னர் விஜய் சேதுபதியுடன் வந்தவர்கள் மற்றும் சி.எஸ்.எஸ்.எப் அதிகாரிகள் அவரை கட்டுப்படுத்துவது போல் உள்ளது. இந்த வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் நடிகர் விஜய்சேதுபதி மீது தாக்குதல் என்ற தகவல் முற்றிலும் பொய்யானது. விஜய்சேதுபதி உடன் பயணித்த நடிகர் மகாகாந்தி அவரது சக பயணி ஜான்சன் இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு மற்றும் தாக்குதலே இது. ஜான்சன் தாக்கியது மகா காந்தியை மட்டுமே. விஜய்சேதுபதியை அல்ல என கூறி வருகின்றனர்.
நடிகர் #விஜய்சேதுபதி மீது தாக்குதல் என்ற தகவல் முற்றிலும் பொய்யானது. விஜய்சேதுபதி உடன் பயணித்த நடிகர் மகாகாந்தி அவரது சக பயணி ஜான்சன் இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு மற்றும் தாக்குதலே இது. ஜான்சன் தாக்கியது மகா காந்தியை மட்டுமே. விஜய்சேதுபதியை அல்ல#VijaySethupathi #Bengaluru pic.twitter.com/jRvcVuIA1A
— Senthil Nathan A (@senthu_ap) November 3, 2021